இதுதொடர்பாக செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நடைமுறை வாழ்க்கையிலும் தூய தமிழிலேயே பேசுகின்ற தகுதிவாய்ந்த மூன்று தூய தமிழ்ப் பற்றாளர்களுக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படவுள்ளன. தகுதி வாய்ந்தவர்கள் Sorkuvai.com என்ற வலைதளத்திலுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி அகரமுதலித் திட்ட இயக்க முகவரிக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்போர் நாடறிந்த தமிழறிஞர்கள் இருவரிடம் தனித் தமிழ்ப்பற்றை உறுதிசெய்து நற்சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும். நற்சான்றளிக்கும் தமிழறிஞர்களின் ஒருபக்க அளவிலான தன் விவரக் குறிப்புகளையும் ஒளிப்படத்துடன் இணைக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலோனர் ஆங்கிலம் கலந்தே பேசுகின்றோம். இருந்தபோதிலும், தமிழின்பால் கொண்ட பற்றினால் சிலர் பிறமொழி கலவாமல் தூயதமிழிலே பேசுகின்றனர். அவ்வாறு பேசும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: போலி இ-பாஸ்: அரசு அலுவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!