ETV Bharat / state

குப்பை வண்டியில் அரசின் இலவச வேட்டி, சேலை; பொதுமக்கள் அதிருப்தி! - Thiruvallur district news

பூவிருந்தவல்லி வட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒன்றான இலவச வேட்டி, சேலையை குப்பை வண்டியில் கொண்டு வந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குப்பை வண்டியில் வந்த இலவச வேட்டி, சேலை!

author img

By

Published : Dec 29, 2022, 9:51 AM IST

பூவிருந்தவல்லி வட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒன்றான இலவச வேட்டி, சேலையை குப்பை வண்டியில் கொண்டு வந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னை: பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1,000 உடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, வேட்டி மற்றும் சேலை ஆகியவை வழங்கப்படவுள்ளது. இதனை ஒட்டி இலவச வேட்டி, சேலைகள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நியாய விலைக் கடைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைக்கு வட்டாட்சியர் செல்வம் தலைமையில் வேட்டி, சேலைகள் அனுப்பட்டுள்ளது. இதில் ஒரு சில நியாய விலைக் கடைகளுக்கு மட்டும் குப்பை அள்ளும் டிராக்டர் வண்டியில் வேட்டி, சேலை அனுப்பட்டுள்ளது.

இது குறித்து வட்டாட்சியர் செல்வம் கூறுகையில், "வண்டியில் சென்றது பொங்கல் பரிசு கிடையாது. அது வேட்டி, சேலை. ஆனால் அவை அனுப்பப்பட்ட வாகனம் குப்பை வண்டியா என்பது குறித்து எனக்கு தெரியாது. அது குறித்து விசாரிக்கிறேன்” என தெரிவித்தார். இலவச வேட்டி, சேலைகளை குப்பை வண்டியில் கொண்டு வந்தது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: TN Govt Pongal Gift: 2023 பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு - தமிழக அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.