மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி குழுவினர் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதியளிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கர்நாடக அரசு அளித்த விரிவான திட்ட அறிக்கையை ரத்து செய்ய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும், திட்ட அறிக்கையை கர்நாடக அரசுக்கே திருப்பி அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றும் கேடடுக்கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகா அறிக்கை சமர்ப்பித்தால் பரிசீலிக்கக் கூடாது என சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும், கர்நாடகா அரசு வேறு ஏதேனும் அறிக்கை அளித்தாலும், அதனை பரிசீலிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :கோடநாடு விவகாரம் - விசாரணைக்கு தடை இல்லை