ETV Bharat / state

குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வைத்த செக்! - criminal case candidates in ADMK

குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள், தங்களது குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியிடுவது மற்றும் அதனை வெளியீடு செய்தது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கும் விதம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வைத்த செக்!

author img

By

Published : Jan 25, 2023, 11:02 AM IST

சென்னை: இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கிணங்க, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் (நிலுவையில் உள்ளவை மற்றும் தண்டனை பெறப்பட்டவை) உள்ள வேட்பாளர்கள், குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள படிவங்களானது,

  1. படிவம் C–1 செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் வெளியீடு செய்ய
  2. படிவம் C–2 செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் அரசியல் கட்சி வெளியீடு செய்ய
  3. படிவம் C–3 தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக பயன்பாட்டிற்காக
  4. படிவம் C–4 வேட்பாளர், குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பான அறிக்கையினை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அளிக்க வேண்டும்.
  5. படிவம் C–5 அரசியல் கட்சியினர், குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பான அறிக்கையினை தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளிக்க வேண்டும்.
  6. படிவம் C–6 தலைமை தேர்தல் அதிகாரியின் அலுலவக பயன்பாட்டிற்காக
  7. படிவம் C–7 குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் கட்சியின் வலைதளங்களில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பாக, இவற்றில் எது முதன்மையானதோ அதன்படி வெளியிடப்பட வேண்டும்.
  8. படிவம் C–8 குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பான அரசியல் கட்சியின் அறிக்கையினை வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து 72 மணி நேரத்திற்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பாக, இவற்றில் எது முந்தையதோ, அதன்படி அறிக்கை அளிக்க வேண்டும்.
  9. படிவம் CA தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக பயன்பாட்டிற்கானது.

வேட்பாளர்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், மேற்படி வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் மற்றும் தங்களது அரசியல் கட்சியின் வலைதளங்களிலும் உரிய படிவங்களில் விளம்பரம் செய்தல் வேண்டும்.

மேற்படி விளம்பரங்கள் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி தினத்திற்கு மறுநாள் முதல், வாக்குப்பதிவு முடிவுறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை 3 முறை வெவ்வேறு நாட்களில் வெளியிடப்பட வேண்டும். மேற்காணும் பொருள் தொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்தின் முழுமையான அறிவுரைகள் மற்றும் பதிப்புகள் வாரியான தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளின் பட்டியலை www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கில் திமுகவுக்கு திருவோடு தான் கிடைக்கும் - மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.