ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - நோயாளிகள் அவதி! - tamilnadu doctors strike

சென்னை: தமிழ்நாடு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் போராட்டத்தினால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

sister
author img

By

Published : Aug 27, 2019, 3:03 PM IST

  • கடந்த 10 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத சிறப்பு ஊதியத்தை புதுப்பித்து தரவேண்டும்.
  • இந்திய மருத்துவக் குழு ஆணைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களின் எண்ணிக்கையை 4டி -2 என்ற அரசாணையின் மூலம் பணியிட மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைப்பதைக் கைவிடவேண்டும்.
  • கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
  • பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்குப் பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும்
    மருத்துவர்களுக்காக காத்திருக்கும் புறநோயாளிகள்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, பெரம்பலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களின் போராட்டத்தினால், புற நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்ததால், நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இன்று காலை 7.30 மணிக்குத் தொடங்கியுள்ள இந்தப் போராட்டம் நாளை காலை 7.30 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:
தமிழக மருத்துவர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தால் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத்தால், நோயாளிகள் அவதி.

Body: தமிழகம் முழுவதும் இன்று அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக

தகுதிக்கேற்ப ஊதியம்,

நோயாளிகளின் எண்ணிக்கையிற்கு ஏற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை அமல்படுத்த

பட்டமேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் மற்றும் அரசு பட்ட மேற்படிப்பு மருத்து மாணவர்களுக்குப் பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று அடையாள வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் வெளிபுற நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

Conclusion: மேலும் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்ததால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க செவிலியர் மட்டுமே உள்ளதால் நோயாளிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.