தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின்போது சட்டம் ஒழுங்கு, போக்குவரத்துக் காவலர்கள் மட்டுமல்லாது சிபிசிஐடி, மத்திய குற்றப்பிரிவு, மது அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்புப்பிரிவு காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
தற்போது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட சிறப்புப் பிரிவு காவலர்கள், மீண்டும் அவர்களது சிறப்புப் பிரிவு பணிக்குச் செல்லுமாறு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி தெரிவித்துள்ளார்.
இந்தச் சிறப்புப் பிரிவு காவலர்கள், அந்தந்த மாவட்டத்தில் அவர்களது சிறப்புப் பிரிவு தலைமை இடத்தில் உடனடியாகத் தகவல் தெரிவித்து, பணியில் ஈடுபடவேண்டும் என தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரோனா, தடுப்புப் பணியில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கட்டை விரல்கள் கிடைக்காது சமயத்தில் கலைஞர் சொன்னது போல் பட்டை தான் உரியும் - உதயநிதி ஸ்டாலின்