ETV Bharat / state

'தமிழ் நாட்டை உயர்த்தும் நோக்கில் பாடுபடுவோம்' - தமிழ்நாடு நாள் வாழ்த்து செய்தி

author img

By

Published : Oct 31, 2020, 9:05 PM IST

சென்னை: இந்திய அரங்கில் தமிழ் பேசும் மாநிலமான தமிழ்நாட்டை உயர்த்தும் நோக்கில் தொடர்ந்து பாடுபடுவோம் என்கின்ற உறுதி மொழியோடு அனைவருக்கும் 'தமிழ்நாடு நாள்' வாழ்த்துகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழின் தலைசிறந்த இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர், “நம் நாடு யாது என்றால் தமிழ் நாடு என்றல்” என்ற ஒரு வாக்கியத்தில் “தமிழ்நாடு” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்க முடிகிறது.

மொழிக்காக பல காலகட்டங்களில் நம் முன்னோர்கள் நடத்திய போராட்டங்களால் மொழிவாரியாக மாநிலங்கள் அமைந்தபோது, தமிழ் பேசும் பகுதி 1.11.1956 ஆம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டு மெட்ராஸ் மாநிலம் என ஆனது.

இத்தகைய தனித்தன்மைமிக்க நிலப்பரப்பிற்கு பேரறிஞர் அண்ணா அவர்களால் ‘தமிழ்நாடு’
எனப் பெயர் மாற்றம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அன்று முதல் ‘தமிழ்நாடு’ எனும் பெயர் உலகெங்கும் ஒங்கி ஒலிக்கிறது.

அதற்கென அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய தமிழர்களின் போராட்ட வரலாற்றை நினைவு கூறவும், அந்தப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட சான்றோர் பெருமக்களை நினைந்து போற்றவும், அவ்வகையில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில், “தமிழ்நாடு நாள் விழா” சென்ற ஆண்டு 1.11.2019 முதல், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர் அவர்களால் திருவள்ளுவர் விழா கொண்டாடவும், அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிட்டு எழுதும் நடைமுறையும் கொண்டுவரப்பட்டது.

நம் தாய்த் தமிழ் மொழிக்கென ஒரு பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் நிறுவியது. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தியது. மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு அடிக்கல் நாட்டியது எனத் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்கு உரியதாகும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு மீட்டெடுக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் கொண்டாடப்பட்டுவருகிறது.

எட்டாம் உலகத் தமிழ் மாவரிகளை தஞ்சாவூரில் நடத்தியது. தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 7 விருதுகளை 55 விருதுகளாக உயர்த்தி வழங்கியது.

சங்க தமிழ் காட்சிக் கூடத்தை மதுரையில் நிறுவியது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தரம் உயர்த்தியது முதலான அளப்பரிய பணிகள் தமிழுக்கு பெருமை சேர்ப்பனவாகும். செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள்,

* அயல் நாடுகளில் தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கத்துடன், அமெரிக்க நாட்டில் உள்ள ஹார்வர்டு மற்றும் ஹுஸ்டன் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ் இருக்கை நிறுவுவதற்கு நிதி உதவி வழங்கப்பட்டது;

* பிறநாட்டு இலக்கியப் படைப்புகளைத் தமிழ் மொழியில் கொண்டு வரவும், நம் நாட்டு இலக்கியங்களைப் பிறமொழியில் படைத்திடவும் பாடுபட்டுவரும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் “மொழிபெயர்ப்பாளர் விருது” வழங்கப்பட்டுவருகிறது;

அயல்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழறிஞர்களின் சிறந்த படைப்புகளைப் போற்றும் வண்ணம் ஆண்டுதோறும் “உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்” வழங்கப்பட்டுவருகின்றன;

* எல்லைக் காவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கும், அவர்தம் மரபுரிமையர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

* தொல்காப்பியருக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் சிலை நிறுவப்பட்டது.

தொல்காப்பியத்தின் பெருமையை விளங்கச் செய்யும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் “தொல்காப்பியர் ஆய்விருக்கை” அமைக்கப்பட்டது.

* அன்றாட பயன்பாட்டில் உள்ள பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள், புதிய சொற்களுக்கு தகுந்த தமிழ்ச் சொற்களை உருவாக்க சொற்குவைத் திட்டம் தொடங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை 20,000 சொற்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

* 8,050 பக்கங்களில், 7 மடலங்களாக செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகராதிகள் திருந்திய பதிப்பாக விரைவில் வெளியிடப்பட உள்ளன.

* தமிழ்ச்சாலை என்னும் செயலி உருவாக்கப்பட்டு, பெரும்பாலான தமிழ் அறிஞர்களாலும்,
மாணவர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ் வளர்ச்சிக்கான ஏராளமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்துவருகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள், “தமிழ் தன்னையும் வாழ வைத்துக்கொண்டு பிற மொழிகளையும் வளர்த்தெடுக்கும் ஆற்றலைப் பொருந்திய மொழி” என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.

அவர்தம் வழியில் நாம் நமது அடையாளமாகப் பெற்றிருக்கின்ற தமிழ் எனும் உன்னத செல்வத்தை வளர்த்தெடுப்பதிலும், தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம் என்கின்ற உறுதி மொழியோடு அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.