ETV Bharat / state

திராவிடக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருகிறது - முதலமைச்சர் - Iftar

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் இஃப்தார் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

சென்னையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் இஃப்தார் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில்பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Apr 14, 2023, 10:50 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.04.2023) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் இஃப்தார் – புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில்
பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அதில் பேசிய அவர், ”அடக்கம், இரக்கம், உதவுதல், அன்பு, ஈகை ஆகிய அருங்குணங்களைப் பற்றிய பாடங்கள் தான் திருக்குரானில் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் எப்போது ஆட்சிக்கு வந்ததோ, சிறுபான்மை இசுலாமிய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்கள், பல சாதனைகள் உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது.

முதல்முறை ஆட்சிக்கு வந்ததுமே மிலாதுநபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அதைக்கூட அதற்குப் பிறகு வந்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி அதை ரத்து செய்தது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், ரத்து செய்ததை ரத்து செய்து மீண்டும் அரசாணை வெளியிட்டு மிலாதுநபிக்கு அரசு விடுமுறை என அறிவித்தார். இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி, மன்னிக்க வேண்டும், நம் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறது.

*இந்த ஆட்சி அமைந்தவுடனே சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.
*சிறுபான்மையினர் விடுதியில் பண்டிகைகளுக்குச் சிறப்பு உணவு தரப்படுகிறது.
*உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியங்களில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
*சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்டப்பட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *தேனி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் முஸ்லீம் உதவி சங்கம் துவங்க ஆணையிடப்பட்டுள்ளது.
*உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
*உலமாக்கள் மற்றும் பணியாளர் வாரிய உறுப்பினர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது.
*தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கான நிர்வாக மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
*4 வக்பு சரக அலுவலகங்களுக்குச் சொந்தக் கட்டடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
*பள்ளிவாசல்கள், தர்க்காக்கள், வக்பு நிறுவனங்கள் பழுது பார்ப்பதற்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
*வக்பு சொத்துகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”.

மேலும், “இவை அனைத்தும் 2021-இல் நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு செய்து கொடுக்கப்பட்டிருப்பவை. இதெல்லாம் நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே செய்து கொடுக்கப்பட்டவை, அதுதான் முக்கியம். நம்முடைய பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் சொன்னார், நேற்றைய தினம் சட்டமன்றத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, அந்தத் துறையின் அமைச்சர்
மஸ்தான் அவர்கள் அரசின் சார்பிலே பல அறிவிப்புகளையெல்லாம் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதில்,

*ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மையினருக்கு, 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் 2500 விலையில்லா மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.
* உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ – மாணவியருக்கு 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
* சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள் துவங்கப்படும்.

இதுபோன்ற பல முக்கியமான அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே செய்து தரப்பட்ட திட்டங்கள்! கோரிக்கை வைக்காமலேயே செய்கிற இந்த அரசு, கோரிக்கை வைத்து செய்யாமல் விட்டுவிடுவோமா? உறுதியாக சொல்கிறேன், இது திராவிட மாடல் அரசு! கலைஞர் வழியில் நடைபெறக்கூடிய அரசு! உங்களுக்காக நடைபெறக்கூடிய அரசு! எல்லாருக்கும் எல்லாம் என்ற நெறிமுறைப்படி இயங்கக்கூடிய அரசு! அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய அரசாக திராவிட மாடல் அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைய தினம் இந்த திராவிடக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருவதை நாம் பார்க்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல், சமூகநீதி - சகோதரத்துவம் - சமதர்மம் ஆகிய மூன்று கருத்தியல்களுக்குத்தான் உண்டு! இந்த மூன்று கருத்தியல்களையும் ஏற்றுக்கொள்ளும் ஜனநாயக சக்திகள் இந்தியா முழுவதும் ஒன்று சேர வேண்டும். இந்த ஒற்றுமையானது தேர்தலுக்காக மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்துக்காக ஏற்பட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி - நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை - டிஜிபி சுற்றறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.