தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த ஐயப்பன், தனியார் வாகனம் மோதி உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வி விர்ஜின் பெர்னதெத், சாலை விபத்தில் உயிரிழந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த நவீன்குமார், விவசாய கிணற்றில் தவறி விழுந்த சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த செல்வ மணிகண்டன் என தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு விபத்துகளில் சிக்கிய 31 பேரின் மரண செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடுகிறேன்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெவ்வேறு விபத்துகளில் இறந்த நபர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு விபத்தில் சிக்கி மறைந்த 31 நபர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து 1 லட்சம் ரூபாய் நிதி உதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.