தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், கடந்த ஆண்டு தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால், தான் வகித்து வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இதனையடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள எல். முருகனை தமிழ்நாடு பாஜக தலைவராக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று முன்தினம் (11/03/2020) நியமித்தார்.
இன்று டெல்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு விமான நிலையத்தில் மாலை, கிரீடம் அணிவித்து பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் முன்னாள் மத்திய இனை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுகுழு உறுப்பினர் வேதா சுப்ரமணியம் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பேரணியாய் அவருடன் கமலாலயம் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முருகன், ”தனக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மற்ற தேசிய தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து, தேசிய தலைமை வழிகாட்டுதலின் படி கட்சி பணிகளை மேற்கொள்வேன்” என்றார்.
இதையம் படிங்க: 'சமூகநீதி குறித்து திமுக பேசுகிறது; ஆனால் பட்டியலினத்தவரை தலைவராக்க திமுக-வால் இயலாது'