சென்னை கமலாலயத்தில் இயங்கிவரும் பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு தமிழ்நாட்டில் இயங்கி வரும் அறம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் ராஜா, கிரண்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பும் மாநில துணைச் செயலாளர் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
தமிழ்நாடு பாஜகவில் புதிதாக மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பாஜகவின் மாநில துணைத் தலைவராக நயினார் நாகேந்திரன், வி.பி. துரை சாமி உள்ளிட்டோரும், மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமின்றி, கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொருளாளர், செயலாளர், மாவட்ட தலைவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
சீன பொருள்களை பயன்படுத்தக் கூடாது, முற்றுலுமாக அதனை ஒழிக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. சாத்தான்குளம் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. குற்றம் செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் நடவடிக்கையை துரிதப்படுத்தவேண்டும். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அனைத்து விவகாரங்களிலும் அரசியல் செய்து வருகிறார். அரசு எவ்வித நடவடிக்கையும் காலதாமதம் செய்யாமல் செயல்பட்டுவருகிறது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அறம் தொலைக்காட்சி CEO ஸ்ரீதர், பாடலாசிரியர் பா.விஜய், நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார், கலை, ஜனனி பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜகவின் மாநில நிர்வாகிகள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இதையடுத்து, பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட முருகன் பதவி ஏற்ற பிறகு, தற்போது நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர். அதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் முருகன் வெளியிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பின் படி,
மாநில துணைத் தலைவர்கள்
- எம். சக்கரவர்த்தி- மத்திய சென்னை மேற்கு
- நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி
- வி.பி. துரைசாமி, நாமக்கல்
- கே.எஸ். நரேந்திரன், கிருஷ்ணகிரி மேற்கு
- வானதி ஸ்ரீனிவாசன், கோயம்புத்தூர் நகர்
- எம். முருகானந்தம், திருவாரூர்
- எம்.என். ராஜா, சென்னை கிழக்கு
- ஏ.ஆர். மஹாலக்ஷ்மி, மதுரை நகர்
- முனைவர். பேரா. கனக சபாபதி கோயம்புத்தூர் வடக்கு
- புரட்சிக்கவிதாசன் புதுக்கோட்டை
மாநில பொதுச் செயலாளர்கள்
- கே.டி. ராகவன், செங்கல்பட்டு
- ஜி.கே. செல்வகுமார், கோயம்புத்தூர் நகர்
- முனைவர் ஆர். சீனிவாசன், மதுரை புறநகர்
- கரு. நாகராஜன், சென்னை கிழக்கு
மாநில செயலாளர்கள்
- கே. சண்முகராஜ், ராமநாதபுரம்
- டால்பின் ஸ்ரீதர், தென் சென்னை
- ப. வரதராஜன், நாகப்பட்டினம்
- பாஸ்கர், தருமபுரி
- ஆர், உமாரதி, கன்னியாகுமரி
- மலர்கொடி, திருப்பூர் வடக்கு
- பி. கார்த்தியாயினி, வேலூர்
- பார்வதி நடராஜன் திருச்சி நகர்
- சுமதி வெங்கடேஷ் மத்திய சென்னை
மாநில பொருளாளர்
- எஸ்.ஆர். சேகர், கோயம்புத்தூர் நகர்
இணை பொருளாளர்
- சிவ சுப்பிரமணியன் பெரம்பலூர்
மாநில அலுவலக செயலாளர்
- எம். சந்திரன் மத்திய சென்னை
இளைஞரணி தலைவர்
வினோத் பி.செல்வம்
திருச்சி, கடலூர், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.