தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்துள்ளது. இச்சூழலில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது கூட்டப்படும் என கேள்வி அனைவரிடத்திலும் இருந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21வரை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படும் என இன்று காலை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 13ஆம் தேதி பொதுநிலை அறிக்கையும், ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.