ETV Bharat / state

'மண்ணின் மக்களின் துயரை துடைப்பதற்கு ஆளுநர் வேள்வியை செய்து வருகிறார்' - தமிழருவி மணியன் - ஆளுநர் ரவி

அன்பின் அடிப்படையில் விளையும் ஆன்மிகத்தை கொண்டு வர நினைக்கும் ஆளுநர் ரவியை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் எனவும்; மண்ணின் மக்களின் துயரை துடைப்பதற்கு ஆளுநர் வேள்வியை செய்து வருகிறார் எனவும் காந்தியவாதியான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat காந்தியவாதி தமிழருவி மணியன்
Etv Bharat காந்தியவாதி தமிழருவி மணியன்
author img

By

Published : Apr 13, 2023, 10:36 PM IST

Updated : Apr 14, 2023, 12:25 PM IST

மண்ணின் மக்களின் துயரை துடைப்பதற்கு ஆளுநர் வேள்வியை செய்து வருகிறார் என தமிழருவி மணியன் பேசியுள்ளார்

சென்னை: தேசத்தின் வளர்ச்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிறுவனர்களுடன் ஆளுநரின் எண்ணித் துணிக கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, காந்தியவாதி தமிழருவி மணியன், அமர் சேவா சங்கம் உள்ளிட்ட 10 சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் பயிற்சி நிபுணர்கள் கௌரவிக்கப்பட்டனர். அப்போது மேடையில் பேசிய காந்தியவாதி தமிழருவி மணியன், “ஆறு மாதங்களுக்கு முன்பாகவே ஆளுநரை தனியாக சந்தித்தேன். 90 நிமிடங்களுக்கும் மேல் பல்வேறு கருத்துகளை ஆங்கிலத்தில் பகிர்ந்து கொண்டோம். ஆனால், ஆளுநர் அரசியல் பற்றி எதுவுமே பேசவில்லை.

அது வியப்பாக இருந்தது. தமிழர்களைப் பற்றியும் அவர்களது வாழ்வியலைப் பற்றியும் ஆன்மிகம் இலக்கியம் குறித்தும், வள்ளுவம் குறித்தும், அதனை ஜியூபோப் மாெழி பெயர்த்த விதம் குறித்தும் , தமிழ்நாட்டு மக்கள் படும் சிரமங்களை எல்லாம் அவர் என்னுடன் பகிர்ந்துகொண்ட செய்திகளை இன்றும் நான் வியப்புடன் தான் பார்க்கிறேன்.

பாரதி, உலக மக்கள் ஒரு தவம் செய்ய வேண்டும் என கூறுவார். இந்த மண்ணில் வந்து சேர்ந்த அனைவரும் நாம் எதை அடைய விரும்புகிறோமோ நான் சொல்லும் தவத்தை செய்தால் அடைய முடியும். அன்பும் இன்பமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். அவற்றை தனித்தனியாகப் பிரிக்க முடியாது. ஆளுநருடன் நான் பேசிவிட்டு திரும்பும்போது அவரை மதம் சார்ந்த நபராகப் பார்க்க முடியவில்லை.

ஆன்மிகவாதியாகத்தான் பார்க்க முடிந்தது. ஒரு மதவாதிக்கு குறிப்பிட்ட எல்லைகள், வரையறைகள் உண்டு. ஆன்மிகவாதிக்கு எல்லையே கிடையாது. அந்த ஆன்மிகத்தைத்தான் இந்த மண்ணில் கொண்டு வர முற்படுகிறார். அதனை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

அன்பின் அடிப்படையில் விளைவது தான் ஆன்மிகம். அன்பில் சிறந்தவர்களாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும். அன்பில் தான் இன்பம் இருக்கிறது. எனவே, தான் அன்பு மட்டுமே பேசப்படுகிறது. மகிழ்ச்சியை அடைவதற்கு மற்றவர்கள் மீது அன்பு காட்டுங்கள்.

ஆளுநரை நான் பார்த்தபோது, அவரின் பேச்சுகளை கேட்டபின்னர் அது அன்பு சார்ந்து இருந்தது. அடக்கம் நிறைந்த மனிதராக ஆளுநர் இருக்கிறார். 57 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வில் இருந்தாலும், எத்தனையோ ஆளுநர்களை பார்த்து இருக்கிறேன். மண்ணின் மக்களின் துயரை துடைப்பதற்கு ஆளுநர் வேள்வியை செய்து வருகிறார்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் நால்வர் பலி - குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்

Last Updated : Apr 14, 2023, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.