சென்னை: எஸ்.ஏ.பிரபு இயக்கியுள்ள 'ஸ்ட்ரைக்கர்' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று (ஜன 27) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் சுசீந்திரன், பேரரசு, விநியோகஸ்தர் சக்தி வேலன், இமான் அண்ணாச்சி, ராபர்ட் மாஸ்டர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “மிமிக்ரி கலைஞர் நவீன் கமல் போல் நன்றாக பேசினார். புரிகிற மாதிரி பேசியுள்ளார். ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பாட்டு எழுதிய பாடலாசிரியர் ஹரி சங்கருக்கு நன்றி. ஏ.ஆர். ரகுமான் வருகைக்குப்பிறகு பின்னணி பாடகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இது ஆரோக்கியமான விஷயம்.
தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்தால் ரீச் ஆகும். இயக்குநர்கள் அனைவருக்கும் சென்றடைவது போன்ற தலைப்புகளை வைக்க வேண்டும். தமிழப் பற்றை கடைபிடிக்க வேண்டும்.
தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதை மீண்டும் கட்டாயமாக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் அந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இளைஞர்களுக்கு பிடிக்கும் என்று படம் எடுத்துக்கொண்டே இருந்தால் சினிமா வலுவிழந்துவிடும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், “வெண்ணிலா கபடிக்குழு மேடை மாதிரி உள்ளது. எல்லோரும் புதியவர்களாக உள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
இதையும் படிங்க: ட்விட்டரில் சூடுபிடிக்கும் AK-63 படத்தின் அப்டேட் - இயக்குநர் யார்?