ETV Bharat / state

'தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது' - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்! - பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டிருப்பதை எந்த சூழ்நிலையிலும், யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

O.Panner selvam
ஓ.பன்னீர்செல்வம்
author img

By

Published : May 1, 2023, 4:20 PM IST

சென்னை: கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அங்கு பல்வேறு கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் அங்குள்ள ஷிவ்மோகாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்ட நிலையில், எம்எல்ஏ ஈஸ்வரப்பா கன்னட கீதத்தை ஒலிபரப்ப கூறினார். இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டு, கன்னட கீதம் இசைக்கப்பட்டது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஈஸ்வரப்பா மீது தவறில்லை என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தின் மெட்டு சரியில்லை என்பதால் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் மே தினம் கொண்டாடிய பின், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டிருப்பதை எந்த சூழ்நிலையிலும், யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையைக் கொண்டாடும் விதமாக மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினோம். திருச்சியில் நடைபெற்ற மாநாடு, தமிழ்நாடு முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை மசோதாவை தாக்கல் செய்தபோது, தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில் அந்த மசோதாவை சிறப்பு கமிட்டிக்கு அனுப்பி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மற்றும் மண்டல வாரியாக மாநாடு நடத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.