ETV Bharat / state

காவிரியின் குறுக்கே அணை, நீர் பங்கீட்டில் 6 டி.எம்.சி குறைவு - நியாயம் கேட்க டெல்லி புறப்பட்ட அமைச்சர் துரைமுருகன்! - tamil nadu government

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கான நீர் பங்கீட்டை உரிய முறையில் வழங்கக் கோரி தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம் மேற்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 4, 2023, 8:10 PM IST

நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் காவிரி நீரை பங்கிடுவதில் நீண்ட கால போராட்டம் இருந்து வருகிறது. இந்த சிக்கலைத் தொடர்ந்து, நீரை முறையாக பங்கிட்டு தர நடுவர் மன்றம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் மூலம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவிலான நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத் தீர்ப்பில் உடன்படாத கர்நாடக அரசு, இதை எதித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

வழக்கை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 192 டி. எம். சி தண்ணீரை குறைத்து 177 டி. எம். சி ஆக வழங்க உத்தரவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரியில் மேட்டூர் அணையில் தான் அதிக அளவு தண்ணீரை சேகரிக்க முடியும். கல்லணையில் குறைந்த அளவு தண்ணீரையே சேகரிக்க முடியும்.

எனவே ஒட்டு மொத்தமாக 177 டி. எம். சி தண்ணீரையும் திறந்து விட்டால் அதனை சேகரிக்கும் அளவிற்கு பெரிய அணை தமிழகத்தில் இல்லை. மேலும் அவ்வாறு திறந்துவிட்டால் அதிக மழை பெய்யும் காலங்களில் அணையில் நீரை சேகரிக்க முடியாமல், அனைத்து நீரும் வீணாக கடலுக்குள் தான் செல்லும். இதனால் 177 டி. எம். சி தண்ணீர் மாதம்தோறும் தமிழகத்திற்கு பிரித்து வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த ஜூன் மாதத்திற்கான தண்ணீர் வழங்கப்பட்டது. மேட்டூர் அணையில் ஆண்டுதோறும் விளைச்சலுக்காக அணையில் இருந்து நீரானது ஜூன் 12ம் தேதி திறந்து விடப்படும். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ஜூன் 12ம் தேதி அணையில் இருந்து நீரானது திறந்து விடப்பட்டது. அதனை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மலர்கள் தூவி திறந்து வைத்தார்.

ஆனால் தற்போது மேட்டூர் அணையில் 49 டி. எம். சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த தண்ணீர் விவசாயத்திற்கு போதுமானதாக இருக்காது என்பதால், இந்த மாதம் ஜூலைக்கான தண்ணீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு காவிரி நிதி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சச்சேனா ஜூன் மாதத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் 4 டி. எம். சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது என்றும்; 6 டி. எம். சி குறைவாக வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கர்நாடக அரசு காவிரி குறுக்கே பல அணைகளைக் கட்டி 115 டி. எம். சி தண்ணீரை சேகரித்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தை பெரும் பாதிப்பு உள்ளாக்கும் வகையில் 9 ஆயிரம் கோடி செலவில் மேக தூது அணையை கட்ட தீவிர செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறது. இந்த அணை 67 டி. எம். சி வரையிலான நீரை சேகரிக்கும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகம் முழுவதுமாக பாலைவனமாக மாறிவிடும். எனவே இத்தகைய திட்டத்தை எதிர்க்கும் வகையிலும், ஜூன் மாதம் வழங்கப்படாத 6 டி.எம்.சி தண்ணீரை கேட்கும் வகையிலும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்ற முற்பட்டார். இதனிடையே அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் பயிர்கள் வாடி போவதால் உரிய நீர் பங்கீட்டை வழங்க கோரி காவேரி மேலாண்மை வாரியத்தில் வலியுறுத்த டெல்லி செல்வதாக கூறினார். மேலும், இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நீர் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க கூடிய அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்குத் தான் உண்டு என்றும் ; தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 26 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரருக்கு தேனியில் உற்சாக வரவேற்பு !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.