ETV Bharat / state

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்! - Tamil nadu teachers Association

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் தெரிவித்தார்.

தியாகராஜன்
தியாகராஜன்
author img

By

Published : Jan 1, 2023, 6:36 PM IST

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்..

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது, "புத்தாண்டு தினத்திலே ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்ட புத்தாண்டு செய்தியில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இந்தாண்டு நிறைவேற்றப்படும் என கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக முதல் நாளான இன்றே அகவிலைப்படியை உயர்த்தி ஆணை பிறப்பித்து உள்ளார்.

2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றியவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 53ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை கால முறை ஊதியத்தில் மாற்றியவர், கருணாநிதி. அதேபோல் தான் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் கூறி வருகிறார்.

வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத்திட்டத்தை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை இன்றைய அறிவிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட சரண்டர், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தல், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் போன்றவர்களை காலமுறை ஊதியத்தின்கீழ் கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அ.தி.மு.க.வில் தொடர ஈ.பி.எஸ்.க்கு தகுதி இல்லை - வைத்திலிங்கம் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.