கரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மே 15ஆம் தேதி வரை 33 விழுக்காடு பணியாளர்களுடன் தலைமைச் செயலகம் இயங்கியது. பணியாளர்களின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கி, அதற்கான செலவை அரசே ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், இன்று முதல் அனைத்து அரசு அலுவலங்களிலும் 50 விழுக்காடு அரசுப் பணியாளர்கள் சுழற்சி முறையில் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. மேலும் அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டிருப்பதாகவும், பணியாளர்கள் பேருந்துகளுக்கு உரிய கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்தது.
அரசின் உத்தரவுக்கிணங்க 50 விழுக்காடு அரசுப் பணியாளர்கள் இன்று தலைமைச் செயலகம் வந்தனர். அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்காக அரசுப் பேருந்துகள் இயக்கம்!