சென்னை: தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி பகதிகளில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நிலவரம்
டிசம்பர் 28, 29ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
டிசம்பர் 30, 31ஆம் தேதிகளில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மூடுபனி எச்சரிக்கை
டிசம்பர் 27, 28ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர்ப் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மற்றொரு கட்டடமும் சேதம்; தொடரும் மீட்புப் பணி