சென்னைப் பல்கலைக்கழகத்தில் புத்திசம் (தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A) பிரிவில் படித்து வந்தவர் த.கிருபாமோகன். அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பில் இணைந்து செயல்பட்டதற்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு அரசியில் தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தில் இணைந்து செயல்பட்டதற்காக மாணவர் ஒருவரை சென்னை பல்கலைக்கழகம் நீக்கி உத்தரவிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இச்செயல் அதிகார அத்துமீறல் எனவும் கடுமையாக சாடியுள்ளார். அதேபோல், மாணவர் மீதான இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமை ஆகியவற்றை நசுக்கிக் கொலை செய்யும் விதமாக இருப்பதாகவும், இந்த அதிகார அத்துமீறலை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது. அதிமுகவினர் அவர்களாகவே திருந்தாவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் திருத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,“தி இந்து” குழுமத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும், பேரறிஞர் அண்ணாவைப் பற்றிய 'மாபெரும் தமிழ்க் கனவு', மற்றும் கலைஞர் பற்றிய 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்', 'ஒரு மனிதன் ஒரு இயக்கம்' ஆகிய நூல்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், எந்த காரணமுமின்றி அரங்கின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிகழ்ச்சி ஒப்புக்கொள்ளப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதன் காரணம் என்னவென்று அரங்கின் உரிமையாளர் சொல்லவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:
"கருத்துரிமையையும், கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமையையும், நசுக்கிக் கொலை செய்யும் அதிகார அத்துமீறலை தி.மு.கழகம் வன்மையாக கண்டிக்கிறது”
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை
இந்தியப் பத்திரிகையுலகில் நீண்ட நெடிய பாரம்பரியமும் எல்லா நிலையிலும் கருத்துரிமை போற்றும் தனித்துவமும் உடைய “தி இந்து” குழுமத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும், பேரறிஞர் அண்ணாவைப் பற்றிய 'மாபெரும் தமிழ்க் கனவு', மற்றும் தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றிய 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்', 'ஒரு மனிதன் ஒரு இயக்கம்' ஆகிய நூல்களின் திறனாய்வுக் கூட்டம் ஆரணி நகரில் நடைபெறவிருந்த நிலையில், நிகழ்ச்சி நடைபெறவிருந்த அரங்கம், காரணம் ஏதுமின்றி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரங்கின் உரிமையாளருக்கு இதற்கான உரிமை உண்டெனினும், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடைப்பெற்று வந்த நிலையில், மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதன் 'மர்மம்' என்னவென்று அறிய வேண்டும் என்ற ஆர்வம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது .
அண்மைக்காலமாகவே தமிழ்நாட்டில் மதவாத - பாசிச சக்திகளின் நிகழ்ச்சிகள் - ஊர்வலங்களுக்கு, அடிமை அ.தி.மு.க அரசு அனுமதி வழங்கி, அபரிமிதமான பாதுகாப்பும் அளிக்கின்ற நிலையில், திராவிடம் - பொதுவுடைமை - சமூகநீதி - தமிழுணர்வு சார்ந்த நிகழ்வுகளுக்கு, பல்வேறு ஓட்டைக் காரணங்கள் காட்டி அனுமதி மறுக்கப்படுகிறது. காவல்துறையின் கெடுபிடியும் அதிகரித்துள்ளது.
தனிப்பட்ட நிகழ்வுகளில் இத்தகைய நெருக்கடிகள் அதிகரித்திருப்பதுடன், கல்வி நிலையங்களிலும் இது ஊடுருவி வருகிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் துறையில் முதுகலை பயின்ற கிருபா மோகன் என்பவர் அத்துறையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காகவே பாசிச சக்திகள் பெரும் நெருக்கடி தந்து இவரை நீக்கியிருப்பதாக ஏடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன; அவரும் நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.
ஜனநாயகம் - அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையையும், கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமையையும், நசுக்கிக் கொலை செய்யும் அதிகார அத்துமீறும் இத்தகைய செயல்களை தி.மு.கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அ.தி.மு.க ஆட்சியாளர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும்; இல்லாவிட்டால் தமிழக மக்கள் அவர்களைத் தக்கபடி திருத்துவார்கள்!
Conclusion: