மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஏப்.30) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 235 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 18 ஆயிரத்து 665 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 27 நபர்களுக்கும் என 18 ஆயிரத்து 692 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 22 லட்சத்து 78 ஆயிரத்து 880 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 11 லட்சத்து 66 ஆயிரத்து 756 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 128 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 16 ஆயிரத்து 7 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்து 582 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 52 நபர்களும், அரசு மருத்துவமனைகளில் 61 நபர்களும் என, புதிதாக 113 நபர்கள் உயிரிழந்தனர். ஆகவே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 46 ஆக உயர்ந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 3,33,804
செங்கல்பட்டு - 80,038
கோயம்புத்தூர் - 78,410
திருவள்ளூர் - 59,702
சேலம் - 41,439
காஞ்சிபுரம் - 38,065
கடலூர் - 30,147
மதுரை - 30,819
வேலூர் - 26,917
தஞ்சாவூர் - 25,536
திருவண்ணாமலை - 23,819
திருப்பூர் - 26,409
கன்னியாகுமரி - 21,615
திருச்சிராப்பள்ளி - 23,366
தூத்துக்குடி - 23,406
திருநெல்வேலி - 24,597
தேனி - 20,203
விருதுநகர் - 19,934
ராணிப்பேட்டை - 20,671
விழுப்புரம் - 18,935
ஈரோடு - 21,239
நாமக்கல் - 15,981
திருவாரூர் - 15,186
திண்டுக்கல் - 15,800
புதுக்கோட்டை - 13,718
கள்ளக்குறிச்சி - 12,571
நாகப்பட்டினம் - 13,418
தென்காசி - 11,831
நீலகிரி - 9,847
கிருஷ்ணகிரி - 14,517
திருப்பத்தூர் - 10,041
சிவகங்கை - 8,567
தருமபுரி - 9,492
ராமநாதபுரம் - 8,417
கரூர் - 7,565
அரியலூர் - 5,606
பெரம்பலூர் - 2,627
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,000
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,073
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: கரோனா நோயாளிக்குப் பயன்படுத்தும் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை