ETV Bharat / state

Tamil Nadu Latest News: 'அரிச்சுவடி கூட அறியாதவர் முதல்வராக இருப்பது சாபக்கேடு' - வைகோ காட்டம் - எடப்பாடி பழனிசாமி

சென்னை: திராவிட இயக்க கொள்கை பற்றி பேசவோ, இந்தி ஆதிக்க எதிர்ப்பைப் பற்றி பேசவோ அரிச்சுவடி கூட அறியாத ஒரு மனிதர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது ஒரு சாபக்கேடு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

vaiko-slams-tamilnadu-cm-edappadi-palaniswami
author img

By

Published : Sep 14, 2019, 4:12 PM IST

Tamil Nadu Latest News: மதிமுக சார்பில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இன்றைய தமிழ்நாடு அரசியல் சூழலில் திராவிட இயக்க லட்சியங்களுக்கு கேடுகள் செய்யும் மத்திய அரசும், அதைப்பின்பற்றி மாநில அரசும் செயல்பட்டு வருகின்ற வேளையில் அதை தடுக்கின்ற வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது என்றார். நாளை நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டில் தன்னுடைய உரையின் தொடக்கம் காஷ்மீர் பிரச்னை பற்றிதான் இருக்கும் என்றும் அதனை தொடர்ந்து மாநாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறினார்.

பேனர் கலாச்சாரத்தை அன்றே மதிமுக எதிர்த்தது அதை இன்று வரை எதிர்த்து வருகிறது என்றும் இம்முறை மாநாட்டுக்காக யாருக்கும் இடையூறாக பேனர்கள் வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்ற முடிவை வரவேற்பதாக கூறிய வைகோ, தேர்வு அவசியம் இல்லையென்றால் மாணவர்கள் தயாராக மாட்டார்கள், அதே நேரத்தில் அடுத்த வகுப்புக்கு போகவிடாமல் தடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் வெளிநாடு சென்று அதிக அளவு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறும் நிலையில், இதற்கு முன்னர் நடந்த பொருளாதார மாநாடு மூலம் 5 சதவிகிதம் கூட முதலீட்டை ஈர்க்கவில்லை என்பதே உண்மை என்றார். சந்திரயானை அணுக முடிகின்ற நம்மால் தற்போதைய இந்திய பொருளாதார சரிவிலிருந்து மீள முடியவில்லை என்றும் இதனால் லட்ச கணக்கான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததன் காரணமாகவே தற்போது பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முழுப்பொறுப்பு பிரதமர் மோடி தான் என்றார்.

ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலகளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்த வைகோ, இந்தி மட்டும் ஒரே மொழியாக இருக்கும் நாடாக இருந்தால் இந்தியா பல பகுதிகளாக மாறும் என்றார். இதைப் பற்றிய வரலாறு அமித்ஷாவிற்கு தெரியாது என்று சாடினார்.

திராவிட இயக்க கொள்கை பற்றி பேசவோ, இந்தி ஆதிக்க எதிர்ப்பை பற்றி பேசவோ அரிச்சுவடி கூட அறியாத ஒரு மனிதர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது ஒரு சாபக்கேடு என்றும் கடுமையாக விமர்சித்தார்.

Intro:Body:இந்தி மட்டும் ஒரே மொழியாக இருக்கும் நாடாக இருந்தால் இந்திய பல பகுதிகளாக மாறும் என வைகோ எச்சரிக்கை.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை ஒய்.எம்.சியே திடலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நாளை மதிமுக சார்பில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ஒய்.எம்.சியே மைதானத்தில் மாநாடு நடைப்பெற உள்ளது.

இது தொடர்பாக இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாளை அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மாநாடு நடைப்பெற உள்ளது. இது இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையில் திராவிட இயக்க லட்சியங்கலுக்கு கேடுகள் செய்யும் மத்திய அரசும், அதை கையாண்டு செய்கின்ற தமிழக அரசும் செயல்பட்டு வருகின்ற வேளையில் அதை தடுக்கின்ற வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றி அமைந்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் நாளை நடக்க உள்ள மதிமுக மாநாட்டில் என்னுடைய உரையின் தொடக்கம் காஷ்மீர் பிரச்சனை பற்றி தான் இருக்கும். அதனை தொடர்ந்து மாநாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. நான் தொடர்ந்து இளைஞர்கள் மாணவர்களை அதிக அளவு சந்திக்க உள்ளேன்.

தொடர்ந்து அவர் பேசுகையில், பேனர் கலாச்சாரத்தை அன்றே மதிமுக எதிர்த்தது அதை இன்று வரை செய்து வருகிறது. இம்முறை மாநாட்டு தொடர்பாக பேனர்கள் யாருக்கும் இடையூறாக வைக்கவில்லை.

5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புக்கு பொது தேர்வு என்ற முடிவை வரவேற்றுள்ளேன்.தேர்வு அவசியம் இல்லையென்றால் மாணவர்கள் தயாராக மாட்டார்கள். அதே நேரத்தில் அடுத்த வகுப்புக்கு போகவிடாமல் தடுக்க கூடாது.

சந்திராயன் சாதனை நம்முடையது ஹிமாலய வெற்றி ஆகும். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

முதல்வர் வெளிநாடு சென்று அதிக அளவு முதலீட்டுகள் ஈர்த்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இதற்கு முன்னர் நடந்த பொருளாதார மாநாட்டு மூலம் 5 % கூட முதலீட்டை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. சந்திராயனை அணுக முடிகின்ற நம்மால் தற்போதைய இந்திய பொருளாதார சரிவு எனக்கு கவலை அளிக்கிறது. இதனால் லட்ச கணக்கான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் தற்போது பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பு பிரதமர் மோடி தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலகளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்ற இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை பற்றி கேட்டதற்கு, இந்தி மட்டும் ஒரே மொழியாக இருக்கும் நாடாக இருந்தால் இந்திய பல பகுதிகளாக மாறும். இதை பற்றி அமித்ஷாவிற்கு தெரியாது. அந்த வரலாறும் அவருக்கு தெரியாது என அமித்ஷா கருத்துக்கு பதில்.

திராவிட இயக்க கொள்கை பற்றி பேசவோ, இந்தி ஆதிக்க எதிர்ப்பை பற்றி பேசவோ அரிச்சுவடி கூட அறியாத ஒரு மனிதர் நாட்டின் முதல்வராக தமிழகத்தில் இருப்பது ஒரு சாப கேடாக பார்கிறேன். அதற்காக நான் வருந்துகிறேன்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.