ETV Bharat / state

நாளை முதல் மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு! - கரோனா வைரஸ்

ஏப்ரல் 1(நாளை) முதல் அனைத்து மருத்துவமனைகளில் 100 விழுக்காடு முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 31, 2023, 11:34 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 11,300க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் நாளை முதல் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் 100 சதவீதம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு கரோனா பாதிப்பு கிடையாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதார அதிகாரிகளுடனான தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாநில சுகாதார பேரவையைக் கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மாநில சுகாதாரப் பேரவை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த சுகாதார பேரவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா மட்டுமில்லாமல் மீண்டும் கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உயர்ந்து வருகிறது. தற்போது வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு விமான நிலையங்களில் 2 சதவீதம் ரேண்டம் பரிசோதனை செய்தால் அதில் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 11,300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என்று மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100 சதவீதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு பாதிப்பு கிடையாது. என்றும் நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம் என்பதால் முதலில் மருத்துவமனையிலிருந்து முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் தற்போது கரோனா பரவல் மிதமான அளவிலேயே உள்ளது தீவிரம் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மல்லாந்து படுத்துக்கிட்டு எச்சில் துப்புவது போல் உள்ளது" - ஈபிஎஸ்-ஐ விளாசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.