கரோனா வைரஸ் பரவல் காரணமாக மதுரை மாவட்டத்திலும் வருகின்ற 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில், ஏழை, எளிய மக்களின் சிரமங்களைப் போக்க சென்னையில் வழங்கியது போல் ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனைச் செயல்படுத்தும் வகையில், வருகின்ற 27ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட துறையினர் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். தற்போது இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதில், 5 லட்சத்து 39 ஆயிரத்து 331 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்க 53 கோடியே 93 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் கரோனா விழிப்புணர்வு மேற்கொண்ட முதலமைச்சர்!