மத்திய அரசு 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்தது. இக்கொள்கையில் இருந்த பல்வேறு அம்சங்களை தமிழ்நாட்டில் இருந்த அப்போதைய எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்குள் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்து, அனைத்து மாநில கல்வித்துறைச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுத்தது.
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்தியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.
அந்தக் கடிதத்தில்,'ஆலோசனைக் கூட்டத்தை அமைச்சர்கள் நிலையில் நடத்த வேண்டும்'எனக் கேட்டிருந்தார். அமைச்சர்கள் நிலையில் கூட்டத்தை நடத்தும்போது புதிய கல்விக் கொள்கை தொடர்பான தனது கருத்துகளையும், பரிந்துரைகளையும் தெரிவிக்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசு எழுதிய இந்தக் கடிதத்திற்கு மத்திய அரசு எந்தவிதப் பதிலும் வழங்கவில்லை. மேலும், மத்திய அரசு திட்டமிட்டபடி மாநில கல்வித்துறைச் செயலாளர்களுடன் இன்று (மே.17) ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது.
இதையும் படிங்க:பெருந்தொற்று காலத்தில் சிறைக் கைதிகளின் நிலை என்ன?