ETV Bharat / state

Plastic Ban: பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வார்டு வாரியாக குழு - சென்னை மாநகராட்சி

Plastic Ban: தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், கரோனா காலகட்டத்தினால் அத்தடையைத் தொடர முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் தடை சோதனையை தீவிரமாக்கத் தற்போதைய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வார்டு வாரியாக குழு - சென்னை மாநகராட்சி

author img

By

Published : Dec 22, 2021, 8:33 PM IST

சென்னை: Plastic Ban: சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சோதனைகளைத் தீவிரப்படுத்த வார்டு வாரியாக குழு அமைக்கச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் சோதனையைத் தீவிரப்படுத்த மாவட்டம் வாரியாக குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையில் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால், பிளாஸ்டிக் தடையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டப் பிளாஸ்டிக் சோதனை:

இந்நிலையில் பிளாஸ்டிக் பைக்கு பதிலாக மஞ்சப்பையைப் பயன்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் பிளாஸ்டிக் தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும்; அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் பிளாஸ்டிக் சோதனையைத் தீவிரப்படுத்த, வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு அமைத்து பிளாஸ்டிக் சோதனையை மீண்டும் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.1.கோடிக்கும் மேல் பெறப்பட்டுள்ள அபராதப் பணம்:

இதன் தொடர்ச்சியாக வணிகப் பகுதிகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் இந்தாண்டில் தற்போது வரை 15,879 ஆயிரம் கடைகளில் ஆய்வு செய்து 4,800 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.11,74,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் தடை விதித்தது முதல் தற்போது வரை மொத்தமாக, 4,94,684 கடைகளில் ஆய்வு செய்து 3,26,924 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு ரூ.1 கோடியே 57 லட்சத்து 53 ஆயிரத்து 100 அபராதம் பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:இடிந்து விழும் நிலையில் பழைமை வாய்ந்த அரசுப் பள்ளி கட்டடம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.