ETV Bharat / state

‘தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது’ - டிடிவி தினகரன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழக

அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்திருப்பதைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TTV condemn on fishermen attack
TTV condemn on fishermen attack
author img

By

Published : Jan 28, 2021, 1:27 PM IST

இது குறித்த டிடிவி தினகரனின் ட்விட்டர் பதிவில், ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 180 பேரை தங்கள் பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்திருப்பது கண்டனத்திற்குரியது.

பிற நாட்டு கடல் எல்லைக்குள் நுழையாமல் ஆழ்கடலில் எவர் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம் என்ற பொதுவான விதி நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ஆந்திர மீனவர்கள் இப்படி நடந்து கொள்வது ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே இதேபோன்று ஆந்திர மீனவர்கள் அத்துமீறி நடந்து கொண்டதில் தமிழ்நாடு மீனவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களைக் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும்.

டிடிவி தினகரன் ட்வீட்
டிடிவி தினகரன் ட்வீட்

மேலும், இது போன்ற பிரச்னைகள் இனிவரும் காலங்களில் நிகழக்கூடாது என்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்வதோடு, சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் அனைவரையும் விடுவித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மாஸ்டர் விஜய் படமா? விஜய் சேதுபதி படமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.