ETV Bharat / state

கிராமப்புறங்களுக்குச் சென்று சேவையாற்றுங்கள் - ஸ்டாலின் கோரிக்கை - கிராமப்புறங்களுக்கு சென்று மருத்துவ சேவையாற்றுங்கள்

மருத்துவம் படித்துவிட்டு பட்டம் பெற்றவர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று மருத்துவச் சேவை ஆற்றுவது கடமை என நினைத்துச் செயல்படுங்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
author img

By

Published : Dec 20, 2021, 3:53 PM IST

Updated : Dec 20, 2021, 5:10 PM IST

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழாவில் மு.க. ஸ்டாலின் பேசும்போது, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கக்கூடிய ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வருக வருக என்று நானும் முதலமைச்சர் என்கிற முறையில் வரவேற்கிறேன்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்வது என்பதை ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நான் கருதவில்லை. எங்களையெல்லாம் ஆளாக்கிய மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மருத்துவக் கல்லூரிக் கனவின் அடையாளம்தான் இந்தப் பல்கலைக்கழகம்.

மு.க. ஸ்டாலின் கோரிக்கை

1987ஆம் ஆண்டின் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழக (சென்னை) சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தாலும் இதற்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் என்ற பெயரைச் சூட்டியவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

இப்பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற 643 கல்வி நிறுவனங்களில், சுமார் இரண்டு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பயின்றுவருகின்றனர் என்றால், இதைவிட பெருமை வேறு எதுவும் நிச்சயமாக இருக்க முடியாது. ‘மருத்துவக் கல்விப் புரட்சி’யின் மகத்தான அடையாளமாகத் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. கல்வியையும் - ஆராய்ச்சியையும் இரண்டு கண்களாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முன்மாதிரி பல்கலைக்கழகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகமானது, கரோனா காலத்தில் மிகச் சிறந்த சேவையை ஆற்றியிருக்கிறது. கரோனாவைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டது. கரோனா காலத்து மனச் சிக்கலை நீக்குவதற்காக பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை இணையம் மற்றும் தொலைபேசி வழியாகச் சேவையாற்றி இருக்கிறது. கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்கள், செவிலியர் மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். எட்டாயிரத்து 400 மாணவர்கள் இதற்கான சிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளனர். இத்தகைய விழிப்புணர்வுப் பணி தொடர வேண்டும்.

நாட்டுக்குச் சேவையாற்ற அன்புடன் அழைப்பு

உங்களில் பலருக்கு மருத்துவம் என்பது, உங்களது கனவாகவோ – சிலருக்கு, பெற்றோர் – உறவினர்கள் கனவாகவோ இருந்திருக்கும். ஆனால், மருத்துவம் படிக்க நீங்கள் கல்விச்சாலைக்குள் நுழையும்போது அது அந்தக் கல்விச்சாலையின் கனவாக மாறிவிடுகிறது.

மருத்துவப் பட்டத்தை நீங்கள் பெற்ற பிறகு, அது இந்த நாட்டின் கனவாக மாறுகிறது! அந்த அடிப்படையில் பார்த்தால் தனிமனிதர்களாக இருந்த நீங்கள், இன்றுமுதல் நாட்டுக்குச் சேவையாற்றும் மாபெரும் மனிதர்களாக மாறுகிறீர்கள்.

அத்தகைய மாபெரும் மனிதர்களாகிய உங்களை இந்த நாடு வரவேற்கிறது. அதேபோல தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில் உங்களை நாட்டுக்குச் சேவையாற்ற அன்போடு அழைக்கிறேன்.

மருத்துவம் என்பது வேலை அல்ல; அது ஒரு சேவை! மதிப்பும், மரியாதையும், போற்றுதலும், பாராட்டுதலும் உள்ள சேவையைத்தான் நாளை முதல் நீங்கள் தொடங்க இருக்கிறீர்கள்.

இரவு பகல் பாராது, மழை வெயில் பாராது, ஆண் பெண் பேதம் இல்லாமல், இந்தச் சாதி - அந்த மதம் என்ற பேதம் இல்லாமல், ஏழை பணக்காரர் என்ற வேற்றுமை பாராது, தனக்கு முன்னால் இருப்பது ஒரு உயிர் என்ற உன்னதமான எண்ணத்தோடு அந்த உயிரைக் காக்கும் கடமையை நீங்கள் செய்யப் போகிறீர்கள்.

இதுவரை உங்கள் வீட்டுக்குப் பிள்ளையாக இருந்த நீங்கள் இனி இந்த நாட்டுக்குப் பிள்ளையாக மாறப் போகிறீர்கள். உங்களுக்கு நான் அதிகப்படியான அறிவுரைகளை சொல்லத் தேவையில்லை. பெரிய படிப்பை - பெரிய பெரிய புத்தகங்களைப் படித்தவர்கள் நீங்கள்.

என்ன நோய் என்று கண்டுபிடியுங்கள். அதற்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள். அதைத் தீர்க்கும் வழியைக் கண்டுபிடியுங்கள். அந்த உடலுக்கு பொருத்தமான வழிமுறையைச் சொல்லுங்கள்.

சமூகத்தைப் படித்துக் கொண்டே சேவை

மருத்துவக் கண்டுபிடிப்பாளர்களாக - சமூக அக்கறை கொண்டவர்களாக வளர்ந்து பெயர் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பட்டம் வாங்கியதோடு உங்கள் படிப்பு முடிந்துவிடவில்லை.

இனிமேல்தான் புத்தகப் படிப்போடு சேர்ந்து சமூகத்தையும் நீங்கள் படிக்கப் போகிறீர்கள். படித்துக் கொண்டே சேவையாற்றப் போகிறீர்கள். அத்தகைய மருத்துவர்களாகிய உங்களுக்குத் தமிழ்நாடு அரசு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும்.

11 மருத்துவக்கல்லூரி விரைவில் தொடக்கம்

மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்க வேண்டும் கருணாநிதியின் சிந்தனையில் உதித்த திட்டமாகும். 2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அதைச் சொல்லி அதன்படி பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கத் தொடங்கினோம். அதுதான் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் உருவாகக் காரணமாக அமைந்தது.

புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி பெற்று அதனைத் தொடங்கிவைக்கும் விழா விரைவில் நடக்க இருக்கிறது.

வருமுன் காப்போம் திட்டம், ஆரம்பச் சுகாதார நிலையங்களை அதிகம் உருவாக்கியது, பெரும்பாலான ஆரம்பச் சுகாதார நிலையங்களை 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மருத்துவப் பணியாளர்களை நியமனம், உயிர்க் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தி உள்ளோம்.

இப்போதும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி இருக்கிறோம். மருத்துவ நூல்கள் மக்கள் மொழியில் இருப்பதுதான் மக்களாட்சி. அந்த அடிப்படையில் தமிழ் மொழியில் மருத்துவ நூல்களை மொழி பெயர்த்து வெளியிட்டுவருகிறோம். இவை அனைத்துக்கும் மேலாக இதுவரை எட்டு கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாகவே நாம் நடத்திவருகிறோம். சிறப்பு முகாம்களை நடத்திவருகிறோம். அதிகபட்சமாக 30 லட்சம் தடுப்பூசிகள் ஒரே நாளில் செலுத்தப்பட்டுள்ளன.

இது மக்களின் நல்வாழ்வின் மீது அக்கறை கொண்ட அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டுவரும் இந்த வேளையில், நீங்கள் மருத்துவர்களாகச் சேவையாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் மனதார, உளமார, மகிழ்ச்சியுடன், பெருமையுடன் வருக, வருக என வரவேற்கிறேன்.

கிராமப்புறங்களில் பணியாற்ற கோரிக்கை

கிராமப்புற மருத்துவச் சேவை என்பது பெரும் சவாலாக உயர்ந்திருக்கிறது. மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, மருத்துவராகப் பணியாற்ற நீங்கள் கிராமப்புற சேவைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நகர்ப்புறங்களிலிருந்தும், கிராமப்புறங்களிலிருந்தும் வந்திருக்கும் நீங்கள், கிராமப்பகுதிக்குச் சென்று மருத்துவச் சேவை ஆற்றுவது கடமை என நினைத்துச் செயல்படுங்கள். நீங்கள் அனைவரும் மக்கள் மருத்துவர்கள் என்ற சிறப்பான பெயரை பெற வேண்டும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: மூன்று மாணவர்கள் பலியான விவகாரம்; தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Last Updated : Dec 20, 2021, 5:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.