சென்னை: ஆவடி எம்.எல்.ஏவும் பால்வளத்துறை அமைச்சருமான சா.மு. நாசர் இன்று காலை திடீரென்று ஆவடி காமராஜர் நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது வகுப்பறைகள், கழிவறைகள், பள்ளி வளாகம் ஆகியவற்றைப் பார்வையிட்டார். மேலும் அங்கு உள்ள குறைகளை ஆசிரியர் மூலமாக கேட்டு அறிந்தார். அதை உடனடியாக அலுவலர்களிடம் கூறி நிவர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் மாணவர்கள் வருகை, ஆசிரியர் வருகைப்பதிவேடு ஆகியவற்றை சோதனை செய்தார். வகுப்பறைக்குச்சென்ற அமைச்சர் மாணவர்களிடத்தில் பேசினார். வகுப்புகள் எப்படி உள்ளது என்று கேட்டறிந்தார். ஆய்வின்போது அமைச்சருக்கு சல்யூட் செய்த மாணவர்களுக்கு மீண்டும் சல்யூட் வைத்து அமைச்சர் நாசர் சென்றார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் நிம்மதியாக இருக்கும் ஒரே குடும்பம் கோபாலபுரம் குடும்பம் தான் - அண்ணாமலை