ETV Bharat / state

தடை உத்தரவை மீறியதாக 4 லட்சம் பேர் கைது- ரூ.46 லட்சம் அபராதம் வசூல்! - Violation of Prohibition Order

சென்னை: தமிழ்நாட்டில் தடை உத்தரவை மீறியதாக இது 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 46 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரடங்கு மீறல் வழக்குப்பதிவு  ஊரடங்கு மீறல் வழக்குப்பதிவு  தடை உத்தரவு மீறல் வழக்குப்பதிவு  தமிழ்நாடு ஊரடங்கு மீறல் அபராதம்  Tamil Nadu curfew case record  Violation of Prohibition Order  Tamil Nadu curfew violation fine
Tamil Nadu curfew case record
author img

By

Published : May 8, 2020, 11:37 AM IST

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், தடை உத்தரவை மீறுபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 45 நாள்களில் தமிழ்நாடு காவல் துறையினர் தடையை மீறியதாக 4 லட்சத்து 37ஆயிரத்து 61 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.

அதேபோல் 3 லட்சத்து 62 ஆயிரத்து 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 46 லட்சத்து 17 ஆயிரத்து 979 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 170 கோடி வசூல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.