தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்பாகச் சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள விவரக்குறிப்பில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 3 ஆயிரத்து 943 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்து 167ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சென்னையில் 2 ஆயிரத்து 393 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று 60 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 201ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 50 ஆயிரத்து 74 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2 ஆயிரத்து 325 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்ட வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
- அரியலூர் - 462
- செங்கல்பட்டு - 5,419
- சென்னை- 58,327
- கோவை - 538
- கடலூர் - 1,073
- தர்மபுரி - 81
- திண்டுக்கல் - 472
- ஈரோடு - 157
- கள்ளக்குறிச்சி - 850
- காஞ்சிபுரம் - 1,977
- கன்னியாகுமரி - 368
- கரூர் - 140
- கிருஷ்ணகிரி - 140
- மதுரை - 2,557
- நாகபட்டினம் -254
- நாமக்கல் - 99
- நீலகிரி - 89
- பெரம்பலூர் - 158
- புதுக்கோட்டை - 174
- ராமநாதபுரம் - 839
- ராணிப்பேட்டை - 754
- சேலம் - 780
- சிவகங்கை - 241
- தென்காசி - 347
- தஞ்சாவூர் - 448
- தேனி - 702
- திருப்பத்தூர் - 172
- திருவள்ளூர் - 3830
- திருவண்ணாமலை - 1,824
- திருவாரூர் - 455
- தூத்துக்குடி - 943
- திருநெல்வேலி - 796
- திருப்பூர் - 180
- திருச்சி - 682
- வேலூர் - 1,308
- விழுப்புரம் - 915
- விருதுநகர் - 493
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 385
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 332
- ரயில் மூலம் வந்தவர்கள்: 406