சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகையை ஆக.3 ஆம் தேதி வெளியிட்டார்.
முதற்கட்டமாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலைக் கோயில்களில் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு, தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.12) அன்னைத் தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த நூல்கள் மூலம் அர்ச்சகர் சொல்வதைப் பக்தர்கள் புரிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும்.
இந்த நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு , நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் - பூவுலகின் எதிர்பார்ப்புகள் என்ன?