சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன்.27) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதில், அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், மேகதாது அணை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வருவது பற்றியும் ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அடுத்த மாதம் ஜூலை மாதம் 28 தேதி முதல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Pride Parade 2022: சென்னையில் களைகட்டிய LGBTQ சுயமரியாதை பேரணி....