ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் 2020: கல்விக்கான நிதி குறித்த எதிர்பார்ப்பும், கல்வியாளர்கள் கருத்தும்! - education budget

சென்னை: மத்திய பட்ஜெட்டின் தாக்கம் இன்னும் ஓயாத நிலையில் தற்போது தமிழ்நாடு அரசின் மாநில பட்ஜெட்டை வரும் 14ஆம் தேதி துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

tamil-nadu-budget-2020-education-budget-expectation
tamil-nadu-budget-2020-education-budget-expectation
author img

By

Published : Feb 11, 2020, 8:34 PM IST

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் மாநில அமைப்பாளர் ஆண்ட்ரூஸ் ஜேசுராஜ், தமிழ்நாட்டில் குழந்தைகள் உரிமைக்கான பல்வேறு செயல்களை இந்தியாவிற்கு முன்மாதிரியாக உருவாக்கி தந்துள்ளோம். ஆனாலும் நாம் கடந்து செல்ல வேண்டிய பாதை நீண்ட தூரம் உள்ளது.

எனவே வரும் நிதி நிலை அறிக்கையில் குழந்தைகளுக்கான கல்வி, ஊட்டச்சத்து, ஒருங்கிணைந்த வளர்ச்சி, உடல் நலம் சார்ந்தவற்றிற்காக இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே குழந்தை செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேபோல், அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றும் கேள்விக்குறியாக உள்ளன. அதிகளவில் பள்ளிகளில் கழிவறைகள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வர வேண்டும் என்றால் தேவையான அளவு கழிப்பிட வசதிகள் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் மாநில அமைப்பாளர் ஆண்ட்ரூஸ் ஜேசுராஜ்

மேலும், ஸ்மார்ட் வகுப்பறை என நாம் பேசினால் மட்டும் போதாது. ஆசிரியர்களும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான பயிற்சியினை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஈராசிரியர் பள்ளிகளை மாற்றி ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஒரு பள்ளிக்கு ஐந்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் அதிகளவில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் மாணவர்கள் 50 விழுக்காட்டினர் பேர் உயர்கல்விக்கு சென்றாலும், அரசு கல்லூரிகள் இல்லாததால் தனியார் கல்லூரி நாடி செல்லும் நிலை உள்ளது. அதனை மாற்றுவதற்கு கூடுதலாக கல்லூரிகளை தொடங்கி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கான கற்றல் முறையில் மாற்றங்களை மேலும் உருவாக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே செயல்வழி கற்றல் முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது. அவற்ரை மாற்றி மனப்பாட முறையில் தற்போது பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி அளிப்பதற்கு பள்ளி வாரியாக தரம் பிரித்து கற்பிக்கவேண்டும். மாநில அளவில் பொதுத்தேர்வு ஒரே தேர்வு என நடத்தாமல் அந்தந்த பகுதிகளில் வாழும் மாணவர்களின் திறனுக்கு ஏற்ப தேர்வு முறைகளை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வெறும் நிதிநிலை அறிக்கை மட்டும் கிடையாது ஒரு மாநிலத்தின் கொள்கை சார்ந்த கருத்துக்களை சொல்லக்கூடிய அறிக்கையாகும். இந்த அறிக்கையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி குறித்த செலவினங்களும் இடம்பெறும்.

வரும் நிதி நிலை அறிக்கையில் பள்ளிக் கல்வியில் அருகாமைப் பள்ளியாக அறிவிக்கக் கூடிய ஏற்பாடு இருக்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்றால் எல்லா பள்ளிகளையும் அருகாமைப் பள்ளிகளாக அறிவிக்கவேண்டும். என தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்படும் என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது அதனை கருத்தில் கொண்டு மாநில அரசு தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகள் பல்கலைக் கழகங்களை வலுப்படுத்துவதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

மாணவர்களுக்கு தேவையான விடுதி வசதி அதற்கு தேவையான நிதி போன்றவை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேபோல் அவர்களுக்கு தேவையான கம்ப்யூட்டர் அறிவு கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என்றார்.

இதையும் படிங்க: பட்ஜெட் எதிரொலி - பங்குச் சந்தைகள் கடும் சரிவு

Intro:தமிழக பட்ஜெட்எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் கருத்து

Body:தமிழக பட்ஜெட்எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் கருத்து

சென்னை,

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் மாநில அமைப்பாளர் ஆண்ட்ரூஸ் ஜேசுராஜ், தமிழகத்தில் குழந்தைகள் உரிமைக்கான பல்வேறு செயல்களை இந்தியாவிற்கு முன்மாதிரியாக உருவாக்கி தந்துள்ளோம். ஆனாலும் நாம் கடந்து செல்ல வேண்டிய பாதை நீண்ட தூரம் உள்ளது.

எனவே வரும் நிதி நிலை அறிக்கையில் குழந்தைகளுக்கான கல்வி ஊட்டச்சத்து ஒருங்கிணைந்த வளர்ச்சி உடல் நலம் சார்ந்தவற்றிற்காக இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்பு கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே குழந்தை செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றும் கேள்விக்குறியாக உள்ளன. அதிகளவில் பள்ளிகளில் கழிப்பறைகள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வர வேண்டும் என்றால் தேவையான அளவு கழிப்பிட வசதிகள் இருக்க வேண்டும்.

ஸ்மார்ட் வகுப்பறை என நாம் பேசினால் மட்டும் போதாது ஆசிரியர்களும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான பயிற்சியினை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஈராசிரியர் பள்ளிகளை மாற்றி ஒரு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் ஒரு பள்ளிக்கு ஐந்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் அதிகளவில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் மாணவர்கள் 50 சதவீதம் பேர் உயர்கல்விக்கு சென்றாலும் அரசு கல்லூரிகள் இல்லாததால் தனியார் கல்லூரி நாடிச் செல்லும் நிலை உள்ளது. அதனை மாற்றுவதற்கு கூடுதலாக கல்லூரிகளை துவக்கி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கான கற்றல் முறையில் மாற்றங்களை மேலும் உருவாக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே செயல்வழி கற்றல் முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது. அவரை மாற்றி மனப்பாட முறையில் தற்போது பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவதற்காக பாடத்தினை உண்மையாக கற்காமல், பாடத்தில் உள்ள வாழ்க்கை சார்ந்தவற்றை கற்காமல் தேர்விற்காக மட்டுமே கற்கின்றனர். எனவே தேர்வு முறைகளை எளிமைப்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி அளிப்பதற்கு பள்ளி வாரியாக தரம்பிரித்து கற்பிக்கவேண்டும். மாநில அளவில் பொது தேர்வு ஒரே தேர்வு என நடத்தாமல் அந்தந்த பகுதிகளில் வாழும் மாணவர்களின் திறனுக்கு ஏற்ப தேர்வு முறைகளை நடத்த வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையில் தமிழகத்தில் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவு செய்கிறோம். ஆனால் அந்த செலவானது ஆசிரியர் சம்பளத்திற்கு பெரும்பகுதி செல்கிறது. அது தவறல்ல. அது மாணவர்கள் நலனுக்காக செய்யப்படும் ஒரு முதலீடாகும்.

ஏற்கனவே அந்த காலத்தில் பள்ளிகள் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் நேரடியாக இயங்கின. இதனால் அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் பள்ளிக்குச் சென்று கண்காணிக்க முடிந்தது. மேலும் ஆசிரியர்களும் உள்ளூரில் இருந்து பணி செய்ததால் ஒவ்வொரு மாணவர் குறிக்கும் நன்கு அறிந்திருந்தார். இதனால் பள்ளிக் கல்வித் துறை சிறப்பாகச் செயல்பட்டது.

ஆனால் தற்போது பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவை பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. எனவே மீண்டும் உள்ளாட்சி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் பள்ளிகள் இயங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வெறும் நிதிநிலை அறிக்கை மட்டும் கிடையாது ஒரு மாநிலத்தின் கொள்கை சார்ந்த கருத்துக்களை சொல்லக்கூடிய அறிக்கையாகும். இந்த அறிக்கையில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி குறித்த செலவினங்களும் இடம்பெறும்.

வரும் நிதி நிலை அறிக்கையில் பள்ளிக்கல்வியில் அருகமைப் பள்ளியாக அறிவிக்கக் கூடிய ஏற்பாடு இருக்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்றால் எல்லா பள்ளிகளையும் அருகமைப் பள்ளிகள் அறிவிக்கவேண்டும். அப்படி என்றால் சமமான காற்று வாய்ப்பிற்கான எல்லா ஏற்பாடுகளையும் அனைத்துப்பள்ளிகளிலும் செய்வதற்கு அவர்கள் முற்படவேண்டும்.

ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர்கள் இருப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பொதுத்தேர்வில் சமமான ஒரு கேள்வித்தாளை மாணவர்கள் எதிர் கொள்ள முடியும்.

விடுமுறை காலி இடமோ வேறு சில காரணங்களால் ஆசிரியர்கள் இல்லாமல் இருந்தாலும் அது மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். எனவே இந்த நிதிநிலை அறிக்கை வெறும் நிதி ஒதுக்கீடாக மட்டுமில்லாமல் இதற்கு தேவையான அளவிற்கு நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு முற்படவேண்டும்.

உயர் கல்வியைப் பொருத்தவரை அண்ணா பல்கலைகழகம் உலகளவில் போல வாழ்ந்த பல்கலைக்கழகம் ஆகும் எனவே அதற்கு சீர்மிகு பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தை பெறுவதற்காக மத்திய அரசிடம் ஒப்படைக்காமல் அதற்கு தேவையான செலவின் அதற்குரிய தொகையை மாநில அரசை ஒதுக்கி அதே நிலையே நீடிக்க செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளை வலுப்படுத்துவதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்குத் தேவையான அளவு நிதியினை வழங்குவதற்கு அரசு முற்படவேண்டும்.

புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்படும் என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது அதனை கருத்தில் கொண்டு மாநில அரசு தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் பல்கலைக் கழகங்களை வலுப்படுத்துவதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு தேவையான விடுதி வசதி தங்கும் வசதி அதற்கு தேவையான நிதி போன்றவை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேபோல் அவர்களுக்கு தேவையான கம்ப்யூட்டர் அறிவு கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் போதே அவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் கைகளில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்தார்.

தேவையான விடுதி வசதி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.