ETV Bharat / state

ஈபிஎஸ்-ஐ எச்சரித்த பாஜக மாவட்ட தலைவர்; அதிமுக-பாஜக கூட்டணியை உடைக்க அண்ணாமலை முயற்சியா..? - அண்ணாமலையின் வியூகம்

'மலையோடு மோதி மண்ணாகிவிட வேண்டாம்' என எடப்பாடி பழனிசாமியை மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் எச்சரித்த நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியை உடைக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த விவகாரத்தில் அண்ணாமலையின் வியூகம் என்ன? என்பது குறித்து ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Madurai
கோப்புப்படம்
author img

By

Published : Aug 13, 2023, 4:37 PM IST

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. ஆனால், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு இந்த முறை பாஜகவிற்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையவுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் பணிகளில் பாஜக இறங்கியுள்ளது. இந்த முறை தமிழகத்தில் இருந்த அதிக எம்.பிக்களை பாஜக எதிர்பார்க்கிறது. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்கினார். இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர். பாதயாத்திரை நடைபெற்று கொண்டிருக்கும்போது, "எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்குதான் தெரியவில்லை. டெல்லி பாஜகவிற்கும், பிரதமருக்கும், அமித்ஷாவிற்கும் நன்றாக தெரியும்" என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து அண்ணாமலையை சீண்டி பார்க்கும் விதமாக அமைந்தது.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, அரசியல் விஞ்ஞானிகளுக்குகெல்லாம் பதில் கூறி தன்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறினார். அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதிலளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை சீண்டினால் எதிர் விமர்சனத்திற்கு அண்ணாமலை தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்தார். இது போன்று அதிமுக-பாஜக இரு தரப்பிலும் உள்ள இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த கருத்து மோதல்கள் முற்றும் நிலைமையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூவை அழைத்து பாஜகவையும், அண்ணாமலையும் விமர்சனம் செய்ய வேண்டாம் என அறியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகளை வீழ்த்துவதற்கு அதிமுகவிற்கு வலுவான கூட்டணி தேவை. தற்போது உள்ள சூழலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்வது இரண்டு கட்சிகளுக்கும் நல்லது என இரு கட்சிகளிலும் உள்ள மூத்த தலைவர்கள் நினைக்கின்றனர். ஆனால், அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலுக்காக தனித்த வியூகம் அமைக்க முயற்சிக்கிறார் என்று பாஜக தரப்பில் தகவல் வெளியாகிறது. பல முறை அதிமுகவை தவிர்த்து மூன்றாவது அணி அமைக்கும் திட்டத்தை டெல்லி மேலிடத்திடம் அண்ணாமலை கூறியிருக்கிறார். ஆனால், தற்போது உள்ள சூழலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே டெல்லி பாஜக விரும்புகிறது. அண்ணாமலையின் தனிப்பட்ட செயல்பாடு பாஜகவில் இருக்கும் ஒரு சில தலைவர்களுக்கே பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழலில், கடந்த 8ஆம் தேதி, மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் எடப்பாடி பழனிசாமியை தாக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "அதிமுகவில் உள்ள செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் எங்கள் தலைவர் அண்ணாமலையைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது. அதிமுக நான்கு அணிகளாக பிளவுபட்டிருப்பதை மறந்துவிட்டு, எங்களது தலைவரை விமர்சிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. திமுகவும், அதிமுகவும் பா.ஜ.கவுடன் போட்டியிடத் தயாரா? - திமுக ஃபைல்ஸ் வெளியிட்ட எங்களுக்கு அதிமுக ஊழல்களைத் தேடி எடுக்க எவ்வளவு நேரமாகும் என்று கருதுகிறீர்கள். மலையோடு மோதி மண்ணாகிவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். இனிவரும் காலங்களில் அண்ணாமலையை விமர்சித்தால் உங்கள் ஊழல் பட்டியல் வெளியாகும்" என குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் அறிவுறுத்தல்படியே அதிமுகவினரை சீண்டும் வகையில் சுசீந்திரன் இந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை பாஜக மேலிடத்திற்கு அதிமுக கொண்டு சென்றது. இதற்கு பாஜக மேலிடம் அண்ணாமலையை அழைத்து, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுகவில் இருக்கும் தலைவர்களை விமர்சனம் செய்வது சரியாக இருக்காது என்றும், மதுரை மாவட்ட தலைவருக்கு இது போன்று விமர்சனம் செய்யக்கூடாது என அறிவுறுத்தவும் கூறியுள்ளனர். அவர்கள் கூறியபடி பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரனை அழைத்து அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்ய சொன்னதே அண்ணாமலைதான் என்று பாஜக வட்டாரங்களில் செய்திகள் வருகின்றன. அதிமுகவை தாக்கி பேசுவதால் அண்ணாமலைக்கு என்ன லாபம்? என்றும் கேள்வி எழுகிறது.

அண்ணாமலையின் திட்டம் குறித்து பாஜக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "அதிமுகவில் உள்ள தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் சரியாக ஒத்துப்போகவில்லை. ஜெயலலிதாவை விமர்சித்த விவகாரத்தில் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக கடுமையாக முயற்சி செய்தது. ஆனால், டெல்லி பாஜக மேலிட தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி சமாதானப்படுத்தினர். கூட்டணி தொடரும் பட்சத்தில் அதிமுகவினரால் தனக்கு உரிய மரியாதை கிடைக்காது எனவும், ஒருவேளை அதிமுகவை ஆதரித்து அனைத்து தொகுதியிலும் தோல்வி அடையும் பட்சத்தில் அதற்கு தானே பொறுப்பேற்க வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார். இதனால், அதிமுக-பாஜக கூட்டணியை உடைக்கும் முயற்சியில் அண்ணாமலை இறங்கியுள்ளார்.

மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன்

இதன் ஒருபகுதியாகத்தான் மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரனை வைத்து எடப்பாடி பழனிசாமியை தாக்கி அறிக்கை வெளியிடச் செய்துள்ளார். பாஜகவில் அண்ணாமலைக்கு என்று தனியாக ஒரு அணி செயல்பட்டு கொண்டிருக்கிறது. அண்ணாமலையின் செயல்பாடுகள் மற்றும் அவர் அதிமுகவை சீண்டுவது பாஜகவில் இருக்கும் ஒரு சில மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைத்தால் கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என அண்ணாமலை முயற்சி செய்கிறார். ஆனால், அதை டெல்லி மேலிடம் விரும்பவில்லை. இருந்தாலும், ஏதோ ஒரு விவகாரத்தின் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியை உடைக்கவே அண்ணாமலை விரும்புகிறார்" என்று கூறினார்.

இது குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை நம்பவில்லை. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவால் பாஜகவிற்கு தொகுதிகளை பெற்றுத்தர முடியவில்லை. அதேபோல், எடப்பாடி பழனிசாமிக்கு 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்தான் முக்கியம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் அவருக்கும் முக்கியமில்லை. ஏற்கனவே அதிமுக நான்காக பிரிந்து கிடைக்கிறது. தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இல்லை. இதனை அறிந்த அண்ணாமலை பாஜக - அதிமுக கூட்டணியை உடைக்க முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன். பாஜக தலைமையில் பாமக, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை இணைத்து கூட்டணி அமைக்க அண்ணாமலை முயற்சி செய்கிறார்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 1989-இல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? - திருநாவுக்கரசர் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.