ETV Bharat / state

சலூன் கடைக்காரரின் மனித நேயம்: மகளின் படிப்புச் செலவை ஏற்ற பார்த்திபன்! - படிப்பு செலவை ஏற்ற பார்த்திபன்

மகளின் படிப்புச் செலவுக்கு வைத்திருந்த பணத்தை எடுத்து கரோனா நிவாரண உதவி வழங்கிய சலூன் கடைக்காரர் மோகனை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பாராட்டியதோடு அவரது மகளின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளார்.

Parthiban
Parthiban
author img

By

Published : May 16, 2020, 10:28 AM IST

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்திவருபவர் மோகன். தேசிய ஊரடங்கால் சிரமப்பட்டுவரும் ஏழை, கூலித்தொழிலாளர்களுக்கு தனது மகளின் மேற்படிப்புக்காகப் பல ஆண்டுகளாகச் சிறுக சிறுக சேர்த்து, சேமித்துவைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாயை எடுத்து சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, மளிகை, காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார்.

இவரின் இந்தச் செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அதுமட்டுமல்லாது இந்தச் செய்தி தமிழ்நாடு முழுவதும் வைரலாகப் பரவியது. தற்போது நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், மோகன் மகளின் ஓராண்டு கல்விச் செலவை ஏற்றுள்ளார்.

இது தொடர்பாக பார்த்திபன் கூறுகையில், "இந்தச் செய்தி என்னைப் பெரிதாகப் பாதித்த நிலையில், எனது நண்பர் சுந்தர் உதவியுடன் மோகனிடமும் அவரது மகள் நேத்ராவிடமும் பேசி எனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் மன நெகிழ்வோடு பகிர்ந்துகொண்டேன்.

மேலும், தாங்கள் பெரும் பணம்படைத்தவர்கள் இல்லையென்றாலும், உதவ வேண்டும் என்ற மனம்கொண்ட அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கும்விதமாக புதிய ஆடைகள் பட்டு வேட்டி, பட்டுப்புடவை, அங்கவஸ்திரம், நேத்ராவுக்கு புது உடைகள், கிரீடம், இனிப்புகள், பழங்கள் என அனைத்தையும் சுந்தர் மூலம் கொடுத்தனுப்பி எனது 'பார்த்திபன் மனிதநேய மன்றம்' அமைப்பின் சார்பாக மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன்.

மகளின் படிப்புச் செலவை ஏற்ற பார்த்திபன்

அதுமட்டுமல்லாது நேத்ராவின் இந்தாண்டு கல்விச் செலவுகள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். வேறெந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சலூன் கடைக்காரரின் மனித நேயம் - நெகிழவைத்த நிவாரண உதவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.