சென்னை: தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை 27 கிலோ மீட்டருக்குப் புதிதாக மூன்றாவது ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதை அமைக்கும் பணியானது ரூ. 256 கோடி செலவில், மூன்று கட்டங்களாக நடைபெற்று தற்போதே நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் புதிய ரயில் பாதையில் இன்று (செப்டம்பர் 17), சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இன்ஜினை இயக்கி அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களை, செங்கல்பட்டு வரை இயக்க மூன்றாவது ரயில் பாதை பயன்படும். இந்தப் புதிய ரயில் பாதையானது தொடங்கப்படும் சமயத்தில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரை அதிக அளவிலான மின்சார ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: யூ-ட்யூபில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் நிதின் கட்கரி