ETV Bharat / state

ரூட் கிளியர் Vanakkam Modi : டேக் டைவர்சன் Go Back Modi - ட்விட்டர் அட்ராசிட்டீஸ்! - மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி #GoBackModi என்ற ஹேஸ்டேக்கையும், #Vanakkam_Modi என்ற ஹேஸ்டேக்கையும் பயன்படுத்தி ட்விட்டரில் சமூக வலைதளவாசிகள் விவாதம் நடத்தி வருகின்றனர்.

டேக் டைவர்சன் Go Back Modi; ரூட் கிளியர் Vanakkam Modi - டுவிட்டர் அட்ராசிட்டீஸ்!

author img

By

Published : May 26, 2022, 12:47 PM IST

சென்னை: மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார. மாலை 05.10 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து சென்னை வரவுள்ள மோடி, 05.15 மணிக்கு விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.

நலத்திட்டங்களை துவக்கி வைத்த பின்னர், பிரதமர் மோடி இரவு 07.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். இதற்காக சென்னையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐந்தடுக்கு பாதுகாப்பிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகத் தொடங்கியது. ஏற்கனவே, இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம், இம்மாதிரியான ஹேஸ்டேக் டிரெண்டாவது வழக்கமாக இருந்தது. தற்போது, மீண்டும் பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையையொட்டி #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இது பிரதமர் மோடியின் எதிர்ப்பாளர்கள் என்றால், மோடிக்கு ஆதரவாக #Vanakkam_Modi என்ற ஹேஸ்டேக்கும் ட்விட்டர் டிரெண்டிங்கில் உள்ளது. எனவே, இரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை கேலிச் சித்திரங்களுடன் கூடிய வார்த்தைகளிலும், வரவேற்பு மிகுந்த மோடியின் படங்களுடன் கூடிய போஸ்டர்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதேநேரம், இன்று சென்னைக்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பலூனை காற்றில் பறக்க விடும் திட்டமும் தமிழ்நாடு பாஜகவிடம் இருந்தது. ஆனால், பிரதமரின் பாதுகாப்பு கருதி, பலூனை பறக்க விட காவல்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமர் சென்னை வருகை: பாதுகாப்பில் 22 ஆயிரம் போலீசார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.