ETV Bharat / state

விவசாயிகளுக்கு உதவிய டஃபே நிறுவனம் - கரோனா தொற்று

சென்னை: ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளுக்கு இலவசமாக உழவு பணி மேற்கொள்ள டஃபே (TAFE) நிறுவனம் உதவியுள்ளது.

TAFE industry help to farmers for tilting lands

author img

By

Published : Jun 5, 2020, 1:28 PM IST

கரோனா தொற்று காரணமாக விவசாயிகள் சந்தித்துவரும் பாதிப்பை குறைத்து, அவர்களுக்கு உதவும் வகையில் உழவுக்கு இலவச டிராக்டர் வழங்கும் jfarm திட்டத்தினை டஃபே நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக நடவு பணிக்கு டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக விவசாயிகள் பாதிப்பை சந்தித்து வரும் வேளையில், அவர்களுக்கு உதவும் வகையில் டஃபே நிறுவனத்தின் இலவச டிராக்டர் திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் எராளமான சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என தமிழக வேளாண் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு அரசின் உழவன் செயலியில் டஃபே நிறுவனத்தின் இலவச டிராக்டர் சேவை இணைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.