ETV Bharat / state

பாஜகவுடன் திமுக திரைமறைவில் கூட்டணி.. இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் தடா ரஹீம் குற்றச்சாட்டு! - தடா ரஹீம்

பாஜகவுடன் திமுக திரைமறைவில் கூட்டணியில் உள்ளதால் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுக்கிறது என்று இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறினாலும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

tada
கோப்பு
author img

By

Published : Aug 15, 2023, 10:34 PM IST

Updated : Aug 17, 2023, 11:31 AM IST

பாஜகவுடன் திமுக திரைமறைவில் கூட்டணி- தடா ரஹீம்

சென்னை: தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது சிறுபான்மையின மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பொய்யான வாக்குறுதியை மீண்டும் மீண்டும் கொடுத்து, திமுக இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற்று வருவதாகவும், அந்த வாக்குறுதி ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இஸ்லாமிய சிறைக் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம், ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "திமுக, அதிமுக ஆட்சிகள் மாறுகிறது. ஆனால், இஸ்லாமிய சிறை கைதிகளின் விடுதலை செய்ய வேண்டிய காட்சிகள் அப்படியேதான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நன்னடத்தை விதியை பயன்படுத்தி ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது 1,408 சிறைக் கைதிகள் நன்னடத்தை விதியின் மூலம் விடுதலை செய்யப்பட்டனர். இந்த 1,408 பேரும் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்கள். அப்போது, மதுரை கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் மூன்று பேர் சிறையில் இருந்தனர்.

அந்த மூன்று பேரை விடுதலை செய்வதற்காக 1,408 பேரை மொத்தமாக விடுதலை செய்தனர். 10 ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாணை இருந்த நிலையில், இந்த மூன்று பேருக்காக அரசாணையில் திருத்தம் கொண்டு வந்து, ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்ற 1,408 சிறை கைதிகளை திமுக அரசு விடுதலை செய்தது.

அப்போதே 13 ஆண்டுகள் கடந்த இஸ்லாமிய சிறைவாசிகள் அதிக அளவில் இருந்தனர். ஆனால், யாரையும் விடுதலை செய்யவில்லை. அத்துடன் திமுக ஆட்சி நிறைவு பெற்று 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்தது. அதிமுக ஆட்சியில் 2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது 1,100 பேர் நன்னடத்தை விதியின் காரணமாக விடுதலை செய்யப்பட்டனர்.

மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 14 பேரை விடுதலை செய்வதற்காகவும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பேருந்து எரிப்பு சம்பவத்தில் சிறையில் இருந்த மூன்று பேரை விடுதலை செய்வதற்காகவும் 2019ஆம் ஆண்டு 1,100 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பேருந்து எரிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 3 பேரும் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனைக்கு மாற்றம் செய்யப்பட்டவர்கள். எப்போதும் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனைக்கு மாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு நன்னடத்தை வீதி பொருந்தாது. ஆனாலும், 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதிலும், அதிக ஆண்டுகளைக் கடந்த இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படவில்லை.

திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்தாலும், இஸ்லாமிய சிறை கைதிகளின் விடுதலை கேள்விக்குறியாகவே இருக்கிறது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளித்தனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா பிறந்தநாளுக்கு நன்னடத்தை விதி அடிப்படையில் 700 சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், 38 இஸ்லாமிய சிறைவாசிகள் இடம் பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

ஆனால், அந்த மகிழ்ச்சி பொய்த்து போகும் வகையில் திமுக அரசு அரசாணையில் மாற்றம் கொண்டு வந்தது. அதில் ஜாதி, மத வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நன்னடத்தை விதி பொருந்தாது என மாற்றம் கொண்டு வந்தது. பொதுவாகவே முஸ்லீம்கள் ஒரு தவறு செய்யும் பொழுது, முதலில் அது மத ரீதியாகவே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படும். முஸ்லீம்களை விடுதலை செய்யக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இப்படி ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளதா? என தெரியவில்லை.

இதனை தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு இஸ்லாமிய சமூகத்தில் உள்ள தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்தனர். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக ஓய்வு பெற்ற முன்னாள் நீதியரசர் ஆதிநாராயணன் தலைமையில் ஒரு குழு அமைத்தார்.

அந்தக் குழு தற்பொழுது வரை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. அந்தக் குழுவில் உள்ள நீதியரசரோ அல்லது உறுப்பினர்களோ இதுவரை சிறையில் உள்ள கைதிகளை சந்திக்கவில்லை. இதுவும் எங்களுக்கு மிகப்பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது. சிறையில் இருந்த 700 பேரும் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்யப்பட்ட நிலையில் இஸ்லாமியர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

கோவையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சசிகுமார், கண்ணன் ஆகியோரை மத மோதல்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் நன்னடத்தை வீதியில் தங்களை விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, உங்களுக்கு நன்னடத்தை விதி பொருந்தாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவர்களையும் இந்த திமுக அரசு 700 பேர் விடுதலை செய்யப்பட்டபோது விடுதலை செய்தது. இஸ்லாமிய சிறைவாசிகளில் 19 பேர் குண்டுவெடிப்பு வழக்கிலும், 22 பேர் கொலை, கொள்ளை வழக்கிலும் சிறையில் இருக்கின்றனர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்ததால் தன்னை விடுதலை செய்யக்கோரி, இதில் ஒரு சில சிறைவாசிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களது மனுவிற்கு அரசு தரப்பில் பதிலளிக்க மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகித் நியமிக்கப்படுகிறார். இருக்கின்ற வழக்கறிஞர்களில் அதிக அளவில் சம்பளம் வாங்கக்கூடிய முகுல் ரோகித்தை அரசு தரப்பில் நியமனம் செய்வதற்கான காரணம் என்ன? - பொதுவெளியில் நாங்கள் சிறுபான்மையினரின் காவலர்கள் என்று கூறிக்கொண்டு இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கூடாது என திமுக செயல்படுவதற்கு இது மிகப் பெரிய உதாரணம்.

மேலும், இந்த வழக்கில் இஸ்லாமிய சிறைக் கைதிகள் சிறை சென்றபோது இருந்த மனநிலையிலேயே இப்போதும் இருப்பதாகவும், இவர்களை விடுதலை செய்யும் பட்சத்தில் எதிர்தரப்பிற்கு ஆபத்து வரும் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் உள்துறை செயலர் அமுதா அண்மையில் தமிழக அரசு சார்பாக மனுத்தாக்கல் செய்தார். நன்நடத்தை விதி 302 ஏன் இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியே கேள்வி எழுப்பி உள்ளார். அதன் அடிப்படையில் இப்ராஹிம் உட்பட நான்கு பேருக்கு பரோல் வழங்கப்பட்டது.

அதேபோல், அண்மையில் நடைபெற்ற இஸ்லாமிய பவள விழா மாநாட்டில் இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் தெரிவித்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் அவர்களுக்கு தேவையானவர்களை விடுதலை செய்வதற்காக நன்னடத்தை விதியை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு தேவையானவர்களுக்கு நன்னடத்தை விதி பொருந்தும் பொழுது இஸ்லாமியர்களுக்கு இது பொருந்தாதா? என கேள்வி எழுகிறது.

மத்திய பாஜக அரசை சாந்தப்படுத்துவதற்காக திமுக இதுபோன்று நடந்து கொள்வதாக ஒரு கேள்வி இருக்கிறது. இரண்டு அரசுகளும் இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்துள்ளனர். இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யாததற்காக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவிற்கு எதிராக வேலை செய்தோம். ஆனால், செந்தில் பாலாஜி பணத்தை வைத்து வெற்றி பெற்று விட்டார். அங்கு கிடைத்த வெற்றி ஒரு ஜனநாயக வெற்றி இல்லை. அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இருக்கின்றன. பாஜகவுடன் திமுக திரை மறைவில் கூட்டணியில் உள்ளது என்பதுதான் என்னுடைய பார்வை.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரது தம்பி அசோக்கையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அசோக்கை வைத்து அடுத்தபடியாக விசாரணையை தொடங்கும் என அனைவரும் பொதுவெளியில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், செந்தில் பாலாஜியை வைத்துக்கொண்டு திரைமறைவில் திமுகவுடன் பாஜக பேரம் பேசிக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கூட்டணியை கைவிடுங்கள் அல்லது பாஜக நிறுத்தக்கூடிய தொகுதிகளில் முகம் தெரியாத நபர்களை திமுக சார்பாக நிறுத்துங்கள் என பேரம் பேசப்படுகிறது. ஒருவேளை பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையேயான ஒப்பந்தம் முடிந்தால் மறுநாளே செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பியின் மீது இருக்கும் அனைத்து வழக்குகளும் கைவிடப்படும்.

ஒருவேளை ஒப்பந்த முடியாவிட்டால் திமுக அமைச்சர்கள் மீது மேலும் வழக்குகள் பாயும். பாஜக ஊழல் செய்யாத கட்சி இல்லை. மகாராஷ்டிராவில் அஜித் பவார் ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்தார். அவர் பாஜக கூட்டணியில் இணைந்ததால் புனிதராகிவிட்டார். அதே நிலைதான் செந்தில் பாலாஜிக்கு ஏற்படும். பாஜக வைக்கும் நிபந்தனைகளுக்கு திமுக அடிபணியும் பட்சத்தில் செந்தில் பாலாஜியும் புனிதர் ஆகிவிடுவார்.

தொடர்ந்து இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதற்காக களப்பணி ஆற்றுக் கொண்டிருக்கிறோம். அது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். நாங்கள் போராட்டம் செய்கின்ற இடத்தில் இருக்கிறோம். திமுக கூட்டணியில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் பேசக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். பேசக்கூடிய இடத்தில் இருந்து கொண்டு பேசாமல் இந்த சமூகத்தை ஏமாற்றும் ஒரு நாடகமாகதான் நான் பார்க்கிறேன். இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யாமல் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்டு வந்தால் நிச்சயமாக முஸ்லீம்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று கூறினார்.

சிறுபான்மையினர் குறித்த சீமானின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பேசிய தடா ரஹீம், "சீமான் சமீப காலமாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாத அளவுக்கு மன நோயாளியாக இருக்கிறார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் நானும் பல இடங்களில் சீமானை ஆதரித்திருக்கிறேன். ஆனால், அவர் எங்களை சாத்தானின் பிள்ளைகள் என கூறியது எங்களுக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. தெரியாமல் கூறிவிட்டேன் என கூறுவதை விட்டுவிட்டு நான் பேசியது சரிதான் எனக் கூறுகிறார். அவரை ஒரு தவறான வார்த்தையில் பேசிவிட்டு நீங்கள் என்னுடைய அண்ணன்தானே என்று கூறினால் சீமான் ஏற்றுக் கொள்வாரா? - சீமான் கூறிய வார்த்தையை திரும்ப பெற வேண்டும்.

அதிமுக பாஜக கூட்டணியில் உள்ளது, திமுகவுக்கு அடுத்த இடத்தில் சீமானை சிறுபான்மையின மக்கள் பார்த்தார்கள். ஆனால், இந்த கருத்தின் மூலம் அவரே தனது வீழ்ச்சி பாதைக்கு வழி வகுத்துக் கொண்டார். ஐந்து வேளை தொழுகின்ற இஸ்லாமிய மக்கள் திமுகவிற்கு வாக்கு செலுத்தினால் கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் திமுக செய்யும் தவறுகளுக்கு நீங்கள் துணை போகிறீர்கள் என சீமான் கூறியிருந்தால் ஏதோ எங்கள் மீது உள்ள பாசத்தில் கூறுகிறார் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், எங்களை சாத்தான் பிள்ளைகள் என்று கூறுவதற்கு நீங்கள் யார்?.

திமுகவில் உள்ள தலைவர்கள் முஸ்லீம்களை திட்டினால், அந்த கட்சியில் உள்ள இஸ்லாமிய தலைவர்களை வைத்து பதில் கூறுவார்கள். அதேபோன்று நாம் தமிழர் கட்சியில் உள்ள இரண்டு இஸ்லாமிய பிள்ளைகளை வைத்து பதில் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை. முஸ்லீம்கள் கலந்து கொள்ளாத ஏதாவது போராட்டத்தை சீமானால் காட்ட முடியுமா? - திமுக, அதிமுக அல்லது பாஜக நடத்தக்கூடிய போராட்டத்தில் கூட முஸ்லீம்களின் பங்களிப்பு இருக்கிறது.

இதற்கு அமீர் கேள்வி எழுப்பினால், நாம் தமிழர் கட்சியினர் அவரை பெரிய ஆளா? என்று கேட்கிறார்கள். அப்படியென்றால் நீங்கள் பெரிய ஆளா? - உங்களுடைய பார்வைக்கு அமீர் சின்ன பையனாக தெரிந்தால், என்னுடைய பார்வைக்கு சீமான் சின்ன பையன்தான். கழுசடை என்று நடிகர் ராஜ்கிரன் கூறியதற்கு உங்களுக்கு கோபம் வருகிறது என்றால், எங்களை சாத்தானின் பிள்ளைகள் என்று கூறியதற்கு எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? - இந்த விவகாரம் நாடாளுமன்றத் தேர்தலில் சீமானுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். அவரது கட்சியில் இருக்கும் சில இஸ்லாமியர்கள் அவரை ஆதரிக்கலாம். ஆனால், இந்த விவகாரம் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாட்டில் நடக்கும் சம்பவங்களை திசை திருப்பக் கூடிய வகையில் சீமான் பேச்சு உள்ளது - திருமாவளவன் பேட்டி!

Last Updated : Aug 17, 2023, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.