நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் மசினகுடிப் பகுதியில் நான்கு பேரை அடித்துக் கொன்ற, வனத்துறையினரால் 20 நாள்களாகத் தேடப்பட்டு வந்த T23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சுற்றி வந்த T-23 புலிக்கு மருத்துவக்குழுவினர் சற்றுமுன் மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். மயக்க ஊசி செலுத்திய பின்னர் புதருக்குள் மறைந்துள்ள புலியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் 20 நாள்களாக போக்கு காட்டி வந்த T-23 புலி பிடிபடுவது உறுதியாகியுள்ளது.