ETV Bharat / state

சூர்யா 42 படத்திற்கான சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு! - vikram movie updates

நடிகர் சூர்யாவின் நடிப்பில் இன்னும் பெயரிடப்படாமல், சூர்யா 42 என்று அழைக்கப்படும் படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய தகவலை படக்குழு தெரிவித்துள்ளது.

surya 42 movie super update released by the team
சூர்யா 42 படத்திற்கான சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
author img

By

Published : Apr 6, 2023, 10:37 PM IST

சென்னை: நடிகர் சூர்யா நேருக்கு நேர் படத்தில் நடிகராக அறிமுகமானாலும், நல்ல நடிகர்‌ என்று பெயர் எடுக்க அவருக்கு பல படங்கள் தேவைப்பட்டது. மேலும், நடிகரின் மகனாக சினிமாவில் நுழைந்தாலும், திறமையும் கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே திரைத்துறையில் சாதிக்க முடியும் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர், சூர்யா. மேலும், ஆரம்ப காலங்களில் தனது நடிப்பினால் விமர்சிக்கப்பட்டாலும் திறமையை வளர்த்துக்கொண்டு நல்ல நடிகராக உயர்ந்தார்.

பாலா இயக்கத்தில் நந்தா படம் தந்த நம்பிக்கையில், அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்து தற்போது தனக்கென ஒரு மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார். மேலும், ரசிகர்கள் படையும் அவர் வசம் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. கமர்ஷியல் மட்டுமின்றி ஜெய்பீம் போன்ற படங்களின் மூலம், சமூக அக்கறை உள்ள நடிகராகவும் தனது அகரம் அறக்கட்டளை மூலம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி அளிப்பவராகவும் தனிப்பாதை போட்டு வருபவர்.

இந்நிலையில், இவரும் இயக்குனர் சிவாவும் மிகப்பெரிய படத்துக்காக இணைந்துள்ளனர். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத அந்தப் படம் தற்காலிகமாக 'சூர்யா 42' என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், 3டி தொழில்நுட்பத்தில் வரலாற்றுப் படமாக இப்படம் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கிட்டத்தட்ட 10 மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது.

ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தற்போது, படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படம், அனைத்து தரப்பினரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது. அப்டேட்டுக்காக காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இன்று மிகப்பெரிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதாவது, தற்போது ‘சூர்யா 42’ என அழைக்கப்படும் இப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி வருகிற 16-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், வரலாற்று படம் மற்றும் 3டியில் உருவாகியுள்ள படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை சுமந்து இப்படம் தயாராகி வருகிறது. சிவா
கமர்ஷியல் படங்களுக்கு பெயர் போனவர். இவர், தற்போது வரலாற்று படம் எடுக்கிறார், இது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: 'உங்களை பாக்கணும்னு தோணுச்சு'-VJS-யிடம் கியூட்டாக பேசிய குழந்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.