சென்னை - சாலிகிராமம் தசரதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா தேவி(27). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதிதாக திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதாவைப் பற்றிய கருத்துகளைப் பேசி, சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதனைக் கண்ட வனிதா, தன்னை பற்றி மிகவும் அவதூறான கருத்துகளைப் பதிவிட்ட சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜூலை 7ஆம் தேதி எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் நேற்று (ஜூலை 14) மீண்டும் போரூர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் வனிதா புகார் அளித்திருந்தார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த வனிதா, சூர்யா தேவி கஞ்சா வியாபாரம் செய்வதாகவும், மேலும் கீழ்த்தரமான வார்த்தைகளால் கருத்துகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில், இன்று( ஜூலை 15) சூர்யா தேவி அனைத்து மகளிர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தன்னை நடிகை வனிதா கஞ்சா வியாபாரி என்று மிகவும் அவதூறான வார்த்தைகளால் பேசி சென்றது மனதைப் புண்படுத்தி உள்ளதாகவும்; உடனடியாக நடிகை வனிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே சூர்யா தேவி தற்போதைய தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தர ராஜனை, தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த போது, அவரைப் பற்றி அவதூறு கருத்துகளைப் பேசி யூட்யூப்பில் வெளியிட்டதாகத் தெரிகிறது. மேலும் இதற்காக சூர்யா தேவி கைது செய்யப்பட்டு, சிறைக்குச் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை வனிதா மீது புகார் அளித்த சூர்யா தேவி! - வனிதாவின் திருமணம்
சென்னை: கஞ்சா வியாபாரி என அவதூறான கருத்துகளைப் பரப்பி வருவதாக, நடிகை வனிதா மீது சூர்யா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.