ETV Bharat / state

அரசின் மெத்தனத்தினால்தான் சுஜித் மரணம் : 100 அடி டவரில் ஏறி இளைஞர் போராட்டம்! - டவரில் ஏறி போராட்டம் செய்த இளைஞர்

சென்னை: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் அரசின் மெத்தனப்போக்கால்தான் இறந்தான் எனக் கூறி இளைஞர் ஒருவர் செல்ஃபோன் டவர் மீது ஏறி கறுப்புக் கொடியுடன் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

young guy struggle
author img

By

Published : Nov 2, 2019, 11:55 AM IST

Updated : Nov 2, 2019, 1:13 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் தனது வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 28 அடி ஆழத்திலிருந்த சுஜித் படிப்படியாக 80 அடி ஆழத்திற்கு கீழே சென்றான். சுஜித்தை உயிருடன் மீட்க மீட்புக் குழுவினர் பல்வேறுகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

டவரில் ஏறி போராட்டம் செய்யும் இளைஞர்

அக்டோபர் 25ஆம் தேதி விழுந்த சுஜித் 80 மணி நேர போராட்டத்துடன், நான்கு நாள்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுஜித் மரணம் ஒரு பாடமாகவும் அமைந்தது. இதனைத்தொடர்ந்து ஆழ்துளைக் கிணறுகளை மூடச்சொல்லி அரசுத் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சுஜித் மரணம் பல தரப்பில் அரசியல் விவாதங்களையும் கிளப்பிவருகிறது.

இந்நிலையில், ஹரிகரன் (22) என்ற இளைஞர் குழந்தை சுஜித் சரியான முறையில் மீட்கப்படவில்லை. அவனது இறப்பிற்கு தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை அருகேயுள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் மீது ஏறி கறுப்புக்கொடியை வைத்து போராட்டம் செய்துள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தாம்பரம் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், டவரில் நின்று போராட்டம் செய்த இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த புனித தோமையார் மலை இணை ஆணையர் பிரபாகரன் ஹரிகரனுடன் தொடந்து பேச்சுவார்த்தை நடத்தி அவரை இறங்கச் செய்தார்.

இதனையடுத்து கீழே இறங்கிவந்த ஹரிகரனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். டவரில் ஏறி போராட்டம் செய்த இளைஞரால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்புடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Intro:திருச்சி மணப்பாறையில் ஆழ்துலாய் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை அரசு மெத்தன போக்காக காப்பாறியதால் தான் சுஜித் இறந்ததாக கூறி இளைஞர் செல்போன் டவர் மீது ஏறி கருப்பு கொடியுடன் ஆரபாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Body:திருச்சி மணப்பாறையில் ஆழ்துலாய் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை அரசு மெத்தன போக்காக காப்பாறியதால் சுஜித் இறந்ததாக கூறி இளைஞர் செல்போன் டவர் மீது ஏறி கருப்பு கொடியுடன் ஆரபாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

நடுக்காட்டுபட்டியில் சுஜித்தை சரியான முறையில் மீட்கவில்லை அதனால்தான் குழந்தை இறந்தது இதற்கு தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் என்று சென்னையில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகாமையிலுள்ள 100 அடிக்கு மேல் உள்ள செல்போன் டவர் உச்சத்தின் மீது ஏறி ஹரிகரன் (22) என்பவர் கருப்புக் கொடியை வைத்து போராட்டம் நடத்தி வந்தார் இதனை கண்ட அப்பகுதி மக்கள் தாம்பரம் போலிசாரிடம் தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்க்கு 108 ஆம்புலன்ஸ்,தீயணைப்பு துறையினருடன் வந்த போலிசார் வெகு நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்.பின்பு அங்கு வந்த புனித தோமையார் மலை இனை ஆணையர் பிரபாகரன் ஹரிஹரனுடன் தொடந்து பேச்சு வார்த்தை நடத்தினார் பின்னர் இறங்கி கீழே வந்த ஹரிஹரனை போலிசார் கைது செய்து தாம்பரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரனை செய்து வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:
Last Updated : Nov 2, 2019, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.