ETV Bharat / state

பாடி மேம்பாலத்தின் கீழ் கத்திமுனையில் அடுத்தடுத்து கொள்ளை: மக்கள் பீதி

பாடி மேம்பாலம் அருகே கத்திமுனையில் மாணவர்களிடம் செல்போன், தங்கச் செயினைப் பறித்துச் சென்ற கும்பலைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பாடி
பாடி
author img

By

Published : Sep 11, 2021, 10:08 AM IST

Updated : Sep 11, 2021, 10:35 AM IST

சென்னை: வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்த ருத்ரா (26), பச்சையப்பன் கல்லூரியில் பி.ஹெச்.டி. கணிதம் படித்துவருகிறார். இவர் கேட்டரிங் செய்துவருகிறார்.

நேற்று அதிகாலையில் மேடவாக்கத்தில் கேட்டரிங் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பாடி மேம்பாலத்தின் கீழ் 100 அடி சாலையில் அவரது வாகனம் பெட்ரோல் இல்லாமல் நின்றிருக்கிறது.

இதனால் பைக்கை தள்ளிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் வந்து ருத்ராவை வழிமறித்துள்ளனர்.

கத்தியைக் காட்டி மிரட்டி அவரின் உடைகளை எல்லாம் அவிழ்த்து அவரைத் தாக்கி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதைப்போல பரத் என்பவர் முகப்பேரில் தனது நண்பரின் திருமணத்தில் கலந்துகொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது பாடி மேம்பாலத்தின் கீழ் 100 அடி சாலையில் சென்றபோது ஒரு சிறுவன் லிஃப்ட் கேட்டுள்ளான்.

லிப்ட் கொடுப்பதற்காக வாகனத்தை நிறுத்தியபோது, ஓடிவந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் அவரது கழுத்தில் கத்தியை வைத்து பாலத்திற்கு அடியில் அழைத்துச் சென்று அடித்துள்ளனர். அவரிடமிருந்து தங்க நகை, செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த இரண்டு வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் குறித்து திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இரண்டு கொள்ளைச் சம்பவங்களிலும் ஆறு பேர் ஈடுபட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி இல்லை எனத் தெரிகிறது. இதைத் தெரிந்துகொண்டே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அருகில் உள்ள தெருக்களின் சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வுசெய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: களேபரமான கல்யாண வீடு: போதையில் குத்தாட்டம்... 3 பேருக்கு கத்திக்குத்து!

Last Updated : Sep 11, 2021, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.