ETV Bharat / state

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத அதிமுக முன்னாள் நிர்வாகி!

சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்த வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுபஸ்ரீ
சுபஸ்ரீ
author img

By

Published : Dec 21, 2019, 6:24 AM IST

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ(23) தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி பணியை முடித்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, பள்ளிக்கரணை - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பேனர் விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ரவிக்குமார் 308, 279, 304 ஆகிய இந்திய சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன், லாரி ஓட்டுநர் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர் நீதிமன்றம்

தற்போது இந்த வழக்கில் பரங்கிமலை போக்குவரத்து காவல் துறையினர் 155 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து அதில் 18 பேரை சாட்சிகளாகச் சேர்த்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், குற்றப்பத்திரிகை நகலை பெற ஜெயகோபால் உள்பட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்த வழக்கு ஆலந்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்டார்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வருகிற 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்வதற்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Intro:பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து பென் பலியான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆஜராகாததால் 27ந் தேதிக்கு தள்ளிவைப்புBody:பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து பென் பலியான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆஜராகாததால் 27ந் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ(23). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜீனியராக வேலை பார்த்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி பணியை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். பள்ளிக்கரணை- துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வந்தபோது சாலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கோபால் இல்ல திருமண வரவேற்பு பேனர் சாலையோரங்களிலும் நடுவிலும் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது சாலை நடுவில் இருந்த ஒரு பேனர் கழுன்று சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியதில் பலியானார். இது பற்றி விபத்து வழக்காக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் 308, 279,304 ஆகிய இந்திய சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கோபால், அவரது உறவினர் மேகநாதன், லாரி டிரைவர் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கில் பரங்கிமலை போக்குவரத்து போலீசார் 155 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து அதில் 18 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த குற்றப்பத்திரிகை ஆலந்தூர் நீதிமன்றத்தில் போக்குவரத்து போலீசார் தாக்கல் செய்தனர். இதை ஏற்று கொண்ட நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை பெற ஜெயக்கோபால் உள்பட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த வழக்கு ஆலந்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஸ்டார்லி முன் வந்தது. அப்போது அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கோபால் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து வருகிற 27ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.