ETV Bharat / state

காவல் உதவி ஆய்வாளர் கரோனாவுக்கு பலி! - தலைமை செயலகக் காலனி போலீசார் விசாரணை

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த உதவி ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

corona
corona
author img

By

Published : Oct 6, 2020, 11:09 AM IST

சென்னை, கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பாபு (வயது 57). இவர் தலைமைச் செயலக காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் ராம்குமார் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பாபுவிற்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த 7ஆம் தேதி பிளாஸ்மாக சிகிச்சையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, செப்டம்பர் 8ஆம் தேதி மற்றும் 24ஆம் தேதிகளில் பாபுவிற்கு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என முடிவு வந்தது.

ஆனால், நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் பாபு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கடந்த 3ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை மாற்றி சிகிச்சையளித்து வந்தனர். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பதாக முடிவு வந்தது.

இதனைத் தொடர்ந்து கரோனா சிகிச்சைப் பெற்று வந்த பாபு இன்று (அக்.06) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பாபுவின் உடல், அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம், புதூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் மோடி- பாஜக... அப்போ அதிமுக?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.