ETV Bharat / state

காவலருக்கு ரத்தம் கொடுத்த திருநங்கை உதவி ஆய்வாளர் - ரத்த தானம் செய்த திருநங்கை

உடல் நலம் பாதிக்கப்பட்ட காவலருக்கு ரத்தம் கொடுத்த உதவி ஆய்வாளர் திருநங்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பிரித்திகா
பிரித்திகா
author img

By

Published : Dec 9, 2021, 2:04 PM IST

சென்னை: அண்ணா சாலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சங்கரவேல். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் திடீரென சங்கரவேலுக்கு மூன்று யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. இதனை அறிந்த அண்ணா சாலை உதவி ஆய்வாளர் திருநங்கை பிரித்திகா யாசினி, தாமாக முன்வந்து 350 மில்லி ரத்தம் கொடுத்து அவருக்கு உதவி செய்துள்ளார்.

ரத்த தானம் செய்த உதவி ஆய்வாளர்
ரத்த தானம் செய்த உதவி ஆய்வாளர்

இந்த ரத்த தானம் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும் ஆரோக்கியமான நபர்கள் இதேபோல் ரத்த தானம் செய்து உயிரைக் காக்க வேண்டும் என பிரித்திகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ரத்த தானம் செய்யுங்கள் - ஸ்டாலின் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.