ETV Bharat / state

யூடியூப்பில் வெளியான கொம்பு திரைப்படம் - சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் புகார் - யூடியூப்பில் வெளியான கொம்பு திரைப்படம்

சட்டவிரோதமாக ஆன்லைனில் திரைப்படத்தை வெளியிட்டு வரும் கும்பலை தடுக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக பேரணியாக சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்கவுள்ளதாக சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.

ஜாக்குவார் தங்கம் புகார்
ஜாக்குவார் தங்கம் புகார்
author img

By

Published : Dec 15, 2020, 9:02 PM IST

சென்னை: லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜீவா. ஸ்ரீசாய் சீனிவாச பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜீவா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கொம்பு. இந்நிலையில், சிலர் திரைப்படத்தை சட்டவிரோதமாக யூடியூப்பில் வெளியிட்டுள்ளதாக கூறி அப்படக்குழுவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 15) புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் கூறுகையில், "கொம்பு திரைப்படம் வெளியான மறு தினமே சில ஆசாமிகள் படத்தை யூடியூப்பில் வெளியிட்டதால் தயாரிப்பாளருக்கு 5 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. படத்தை யூடியூப்பில் வெளியிட்ட நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.

சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், நடிகர் ஜீவா செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து இதே போன்று சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக படத்தை திரையிட்டு வரும் கும்பலை தடுக்கக்கோரி அனைத்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேரணியாக சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: வைபவின் ’காட்டேரி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.