ETV Bharat / state

பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறதா? - பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுவது என்ன? - Are the rights of students being taken away

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில், படிக்கும் மாணவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் தற்பொழுதைய செயல்பாடுகள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 30, 2023, 7:14 PM IST

பிரின்ஸ் கஜேந்திரபாபு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் அடிப்படை வசதிகள், ஆசிரியர்களின் நியமனம் போன்றவற்றை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் செய்துத் தர வேண்டும் என பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தி உள்ளார்.

படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்காமல் சமூக நீதியின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய உரிமையை மறுக்கிறோம். மறுபுறம் அதே சமூக நீதியின் அடிப்படையில் பல்கலைக் கழகத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு தரமான கல்வியை தருவதற்கு மறுக்கிறோம். இதனால் தான் போராட்டம் வெடிக்கிறது. ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு சொல்லிக் கொடுத்து மாணவர்களை ஈர்த்தால் ஏன் போராடப் போகின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டின் தொன்மையான பல்கலைக் கழகமான சென்னைப் பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது 1923-இல் சென்னைப் பல்கலைக்கழக எல்லைகள் வடக்கே ஹைதராபாத், மேற்கே மங்களூர், மைசூர், தென்மேற்கில் கேரளா, திருவனந்தபுரம் எனப் பரந்து விரிந்திருந்தது. மாணவர்களின் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் மக்கள்தொகை மற்றும் கல்வியை அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இருந்து புதிய பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பல்கலைக் கழகத்தின் அடிப்படைப் பிரச்னைகளுக்காவும், சமூகம் சார்ந்த பொதுப்பிரச்சனைகளுக்காகவும் போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறையில் படிக்கும் மாணவர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி கடிதம் அளிக்க வேண்டும் என துறையின் தலைவர் தெரிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அதேபோல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாலை 5 மணிக்கு மேல் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்தால் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் சட்டவிதிகளின் படி மாணவர்களுக்கான விதிமுறைகளும் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான உறுதிமாெழிப்படிவம் வாங்கப்பட்டதாக பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்தது.

இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “பல்கலைக் கழகத்திற்கு படிக்க வரும் மாணவர்கள் குழந்தைகள் கிடையாது என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு முதுகலைப் பட்டப்படிப்பிற்கு வருகின்றனர். இளநிலைப் பட்டபடிப்பினை முடிக்கும் போது கிட்டத்தட்ட 21 வயது அடைகிறார். வாக்குரிமைப் பெற்ற ஒருவர் முதுகலைப் பட்டப்படிப்பினை முடிக்கும் போது தேர்தலில் நிற்கும் நிலைக்கும் வந்துவிடுவார்.

உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமைப் பெற்ற, தேர்தலில் போட்டிப்போடும் தகுதியை பெற்ற மாணவர்கள், தாங்கள் படிக்கும் காலத்தில் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து இந்திய அரசமைப்பு சட்டம் தந்துள்ள ஜனநாயக உரிமைகளை உணர்ந்து சட்டத்திற்கு உட்பட்டு தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவது தவறு என சொல்வது இந்திய அரசமைப்பு சட்டத்திற்கே எதிரான ஒரு செயல்பாடு.

இளம் வயதில் இருக்கக்கூடிய மாணவர்கள், தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அடக்கப்பட்ட உணர்வுகளுக்குப் பின்னால் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை சொல்ல முடியாது. மனோதத்துவ நிபுணர்களும் உணர்வுகளை அடக்காமல் வெளிப்படுத்த விடுங்கள் என கூறுகின்றனர். மாணவர்கள் கூடி பேசி தனது கருத்தை வெளிப்படுத்துவது எப்படி சட்டவிரோதமாகும். மாணவர்கள் ஒரு சட்டப்படியான அமைப்பில் உறுப்பினராக இருப்பது எப்படி சட்டவிராேதமாகும்.

மாணவர்களை சட்டப்படியான அமைப்பில் உறுப்பினராக இருப்பதை தடுப்பது எது. அரசியல் கட்சியின் மாணவர் பிரிவில் ஒருவர் இருக்கலாம். அரசமைப்பு சட்டத்தின் படித்தான் அந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே தடை செய்யப்பட்ட அமைப்பில் ஒருவர் இருக்கிறார் என கூறினால் தான் அந்த மாணவரை அது தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள் என எச்சரிக்கை செய்ய முடியும்.

அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருக்கமாட்டேன் என கூறுவது எப்படி நியாயமாக இருக்கும். அதைவிடக் கொடுமை பல்கலைக் கழக நிர்வகத்திற்கு எதிராகவும், பல்கலைக் கழகத்தின் நடவடிக்கைக்கு எதிராக போராட மாட்டேன் என்பது எப்படி?. பல்கலைக்கழகம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையை எதிர்த்து போராடும் பொறுப்பு ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் இருக்கிறது.

பள்ளிப்படிப்பை முடித்தோ அல்லது தொடர முடியாமலோ வேலைக்கு சென்று இருக்கலாம். அரசமைப்பு சட்டம், அரசியல் சட்டம் குறித்து தெரியாமல், போராட முடியாதவர்களின் குழந்தைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி இருக்கலாம். அவர்கள் தங்களின் உரிமைக்காக போராடுவார்களா என்பதை கருதித்தான் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வருகின்றனர். யாரும் அன்றாட வேலைக்காக பல்கலைக் கழகத்திற்கு வரவில்லை. எனவே மக்களுடைய போராட்டங்கள், கோரிக்கைகள் குறித்து விவாதிக்கும் இடம் பல்கலைக் கழகம் தான்.

அது நியாயமானதா என்பதை கூறும் உரிமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உள்ளது. ஒரு கொள்கையை எடுத்து விவாதிக்கும் உரிமை கல்வியியல் செயல்பாடு மாணவர்களுக்கு உண்டு. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளை பல்கலைக்கழகத்தில் விவாதிக்க முடியும். இது போன்ற விபரங்களை தெரியாமல் ஒருவர் பல்கலைக் கழகத்தின் துறைத்தலைவராகவும், பதிவாளராகவும், துணைவேந்தராகவும் இருக்க முடியுமா?

இந்தியாவில் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை ஒடுக்கும் முயற்சி எழத் தொடங்கி இருக்கிறது. மிகவும் ஜனநாயகத் தன்மையுடன் ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரையும், வேந்தரையும் எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்திற்கு செவி சாய்த்து அன்றைய பிரதமர் இந்திராகாந்தி ராஜினமா செய்தார் என்பது வரலாறு.

தமிழ்நாட்டில் தந்தைப் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் கண்ணியமிக்க வாழ்க்கையை இங்கு தந்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பல்கலைக் கழகமும் மாணவர்களிடம் அடிமை சாசனம் எழுதி வாங்குவதைப் போல நான் எந்தப் போராட்டத்திலும் கலந்துக் கொள்ள மாட்டேன், நிர்வாகத்தை எதிர்த்து போராட மாட்டேன், அமைப்பிலும் இருக்கமாட்டேன் என எழுதி கேட்பது உன்னுடைய ஜனநாயக உரிமையை பயன்படுத்த கூடாது என்பதாக பொருள். எனவே அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக ஜனநாயக செயல்பாட்டில் எந்தப் பல்கலைக் கழகமும் இறங்கக்கூடாது.

மாணவர்களிடம் தீயப்பழக்கங்கள், போதைப் பழக்கங்கள், வகுப்புகளுக்கு வேண்டும் என்றே வராமல் இருக்கின்றனர் என்கின்ற புகார்கள் எழுமேயானால் அத்தகைய மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு ஜனநாயக போராட்டத்திற்கும், மாணவர்கள் தங்களை தாங்களே அழி்த்துக் கொள்ளும் பழக்க்கத்தையும் ஒன்றாக பார்க்க முடியாது. இது வேறு, அது வேறு. ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வகுப்பு இழந்தால் மாணவர்கள் சமூகம் சார்ந்து நடத்தி உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் தோழர் என் சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் வழங்கும் எனவும், அதற்கான பரிந்துரையை அளிக்க உள்ளோம் என முதலமைச்சர் அறிவிக்கிறார்.

தோழர் என் சங்கரய்யா தான் படித்தக் காலத்தில் சிறைச்சாலையில் இருந்ததால், பட்டபடிப்பினை முடிக்க முடியவில்லை. அவர் பட்டப்படிப்புத்தான் முக்கியம் என இருந்திருந்தால் விடுதலையே கிடைத்திருக்காது. எனவே மாணவர்களின் போராட்டம் ஜனநாயகம் சார்ந்து சமூக அக்கறையுடன் இருக்கிறது என்றால் அத்தகைய போராட்டங்களை அங்கீகரிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பல்கலைக் கழகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது.

எனவே அத்தகைய மாணவர்களை பழி தீர்க்கும் வகையில் அவர்களிடம் உறுதிமொழிப்படிவத்தில் கையெழுத்து வாங்குவது நிச்சயம் ஜனநாயகமற்ற செயல்பாடு. அத்தகைய செயல்பாட்டில் எந்தக்கல்லூரியும், பல்கலைக் கழகமும் ஈடுப்பட கூடாது அதனை தமிழ்நாடு அரசும் அனுமதிக்கக் கூடாது. பல்கலைக்கழத்தில் மாணவர்கள் சுந்திரமாக செயல்பட வேண்டும். அப்போது தான் ஆய்வுகள் மேற்கொள்ள முடியும். ஆய்வுகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட முடியாது. மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகம் முடிகிறது என கூறினால் , அதனைக் கடந்தும், நூலகத்தில் அமர்ந்தோ, தனது துறையிலோ பணியாற்றலாம்.

எனவே பல்கலைக் கழகம் மாணவர்கள், பேராசிரியர்கள் குறிப்பிட்ட நேரம் வரையில் இருக்க வேண்டும் என்பது நியாயமற்ற அணுகுமுறை. அவ்வாறாக பல்கலைக்கழகம் நடந்துக் கொள்ளும் போக்கு, கல்வியியல் செயல்பாட்டிற்கு உகந்தது அல்ல. மாணவர்கள் அனுபவம் பெற்றவர்கள் தான். பல்கலைக் கழகத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தெரிந்தவர்கள் எனவே வேலை நேரம் முடிந்தப்பின்னர் செயல்படும் போது பொறுப்புகளில் செயல்பட வேண்டியதிருக்கும் என்பதை கூறலாம். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கு வழிகாட்டலாம்.

அதேபோல் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு விடுதி மறுப்பது என்பது உரிமை மறுப்பதாகும். பெண் மாணவர்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கு விடுதி மறுப்பது நியாயமற்ற அணுகுமுறை. சுயநிதிப்பிரிவுகளை துவக்கி அதற்கான கட்டணங்களை வசூல் செய்வது நியாயமற்ற அணுகுமுறை. பல்வேறுப் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பதால் பற்றாக்குறை இருக்கிறது. அதனை சமாளிக்க கவுரவ விரிவுரையாளர் என்ற பெயரில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கின்றனர். அவருக்கு அளிக்கப்படும் ஊதியத்தில் எவ்வாறு அவர் தன்னை தினமும் அறிவார்ந்த செயலில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும். மாணவருக்கு உரிமை மறுக்கப்படுகிறது என கூறினால் ஆசிரியர் இல்லை என்பதே உரிமை மறுப்பதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

பல்வேறு கோளாறுகள் இருக்கிறது என்றுச் சொன்னால் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டியது தமிழ்நாடு அரசு தான். அதனை உடனடியாக ஆய்வு செய்து நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பல்கலைக் கழங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதால், பழங்குடி, பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து முதல் தலைமுறையாக எம்ஏ முடித்து, ஸ்லெட், நெட் தேர்வுகள் முடித்து கல்லூரியில் ஆசிரியராக நியமிப்பதற்கான தகுதியை பெற்று இருப்பார். அதனையும் தாண்டி முனைவர் பட்டமும் பெற்றிருப்பார். பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கிறது.

ஆனால் நியமிக்க மாட்டேன் என கூறினால் அவர்களின் வாழ்வாதரத்தை மறுப்பதாக அர்த்தம். அதற்கு வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இட ஒதுக்கீட்டை போரடி பெற்றார்களே அது தங்களின் வாரிசுகள் பயன்பெறுவார்கள் என்பதற்காகத்தான். ஒரு புறம் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் வந்து சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அநீதியை இழைக்கின்றோம். மறுபுறம் உரிமையை மறுக்கின்றோம். அதிக நாட்கள் நியமிக்காமல் இருந்தும் அவர் பட்டம் பெற்றும், காலம் முடிந்ததால் வாய்ப்பினை இழந்து விடுவார்.

ஒரு புறம் சமூக நீதியின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய உரிமையை மறுக்கிறோம். மறுபுறம் அதே சமூக நீதியின் அடிப்படையில் பல்கலைக் கழகத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு தரமான கல்வியை தருவதற்கு மறுக்கிறோம். இதனால் தான் போராட்டம் வெடிக்கிறது. ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு சொல்லிக் கொடுத்து மாணவர்களை ஈர்த்தால் ஏன் போராடப்போகின்றனர். தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட காலகெடு நிர்ணயம் செய்து நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கான கொள்கையை விரைந்து முடிவு செய்து நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு துணைவேந்தர்களை அழைத்து பேசி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "திமுகவை தோற்கடிப்பது தான் நமது இலக்கு" - முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.